×
 

சிஎஸ்கே அணியிலிருந்து இந்த வீரர் நீக்கம்.. கம் பேக் கொடுத்த ஷேக் ரசீத்!!

சிஎஸ்கே அணியில் அஸ்வினுக்கு பதிலாக ஜெமி ஓவர்டனும் காண்வேக்கு பதிலாக ஷேக் ரசீதும் மாற்றப்பட்டுள்ளதாக அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இது குறித்து பேசிய அணியின் கேப்டன் தோனி, நாங்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் ரசிகர்கள் அதிக அளவு எங்களை ஆதரிக்கிறார்கள். இது உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன். என்னுடைய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய ஆட்டத்தில் நாங்கள் முதலில் பந்து வீச முடிவு எடுத்து இருக்கிறோம். லக்னோவில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கிறது. இதனால் இரண்டாவது இன்னிங்சில் ஆடுகளம் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறும் என நினைக்கிறேன். டி 20 போட்டிகளுக்கு தேவையான உத்வேகத்துடன் வீரர்கள் இருக்க வேண்டும். எங்கள் அணி பேட்டிங் தொடர்ந்து சொதப்பி வருகிறது. நாங்கள் சரியாக விளையாடவில்லை. பந்துவீச்சில் நாங்கள் நன்றாக செயல்பட்டு இருக்கிறோம்.

இதையும் படிங்க: #IPL2025: மண்ணை கவ்விய டெல்லி அணி..! மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி..!

இவ்வளவு தோல்விகளை தழுவினாலும் நல்ல மன உத்வேகத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தேவைப்படும் நேரத்தில் பெரிய ஷாட்களை ஆடுங்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் இரண்டு மாற்றங்களை செய்திருக்கிறோம். அஸ்வினுக்கு பதிலாக ஜெமி ஓவர்டனும், காண்வேக்கு பதிலாக ஷேக் ரசீதும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், நாங்களும் முதலில் பந்து வீச தான் முடிவெடுத்திருந்தோம். இதற்கு காரணம் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ஆடுகளம் மெதுவாக இருக்கும். ஆட்டம் செல்ல செல்ல பேட்டிங்கிற்கு சாதகமாக மாறுகிறது. சிஎஸ்கேவுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுத்தாலும், அவர்கள் நல்ல ஒரு ஆட்டத்தை ஆடி வெற்றி பெற்று விடுவார்கள். எனவே நூறு சதவீதம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும். நாங்கள் இங்கு நல்ல கிரிக்கெட் ஆடுவதற்காக தான் வந்திருக்கிறோம். எங்கள் அணியில் இன்று மார்ஸ் பிளேயிங் லெவனுக்குள் திரும்பி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: கோலி படைத்த சாதனை..! ஆர்ஆரை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அபாரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share