×
 

சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய மாற்றம்... தோனி ரசிகர்கள் உற்சாகம்; சோகத்தில் ருதுராஜ்!!

சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.

இதில் சிஎஸ்கே அணி தொடக்கம் முதலே மோசமாக ஆடி வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் அணியின் கேப்டம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சாமீபத்திய ஆட்டத்தில் அவரது முழங்கையில் காயம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: சிஎஸ்கேவுக்கு மீண்டும் கேப்டனாக தோனி அறிவிப்பு: ருதுராஜ் காயத்தால் நீக்கம்..!

அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 2025 ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதை அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் உற்சாகமடந்துள்ளனர். இதுஒருபுறம் இருக்க மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பத்து ஆண்டுகள் செயல்பட்ட ரோஹித் சர்மா கடந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

நடப்பு தொடரில்  மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். பாண்டியா தலைமையில் அந்த அணியும் மோசமாகவே செயல்பட்டு வருகிறது. மும்பை அணி தான் விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து உள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.  

இதையும் படிங்க: மோசமாகி வரும் CSK பேட்டிங்... அணிக்குள் வரும் 2 இளம் வீரர்கள்... யார் தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share