×
 

ஐபிஎல் வரலாற்றில் பெரும் சாதனை... ரோஹித் சர்மாவை ஓவர்டேக் செய்வாரா விராட் கோலி?

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த ரொஹித் ஷர்மாவின் சாதனை இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி முறியடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.  இதில் இன்றைய போட்டி ஆர்சிபி அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.

இதனிடையே இன்றைய ஆட்டத்தில் கோலி சிக்ஸர்கள் அடித்தால் ரோஹித்தின் சாதனையை முறியடிக்க முடியும் என கூறப்படுகிறது. ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் கிறிஸ் கெய்க் இருக்கிறார். அவர் இதுவரை 141 இன்னிங்ஸ்கள் விளையாடிய நிலையில் 357 சிக்சர்கள் அடித்துள்ளார். இந்த பட்டியலில் 2வது இடத்தில் மும்பை அணியின் ரோஹித் சர்மா இருக்கிறார். இவர் இதுவரை 256 இன்னிங்ஸ்களில் விளையாடி 282 சிக்சர்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்.. 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

ரோஹித்தின் இந்த சாதனையை முறியடிக்க விராட் கோலி வெறும் 4 சிக்ஸர்கள் அடித்தால் போதும் என கூறப்படுகிறது. விராட் கோலி இதுவரை 256 இன்னிங்ஸ்களில் விளையாடி 278 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 4 சிக்சர்கள் அடித்தால் ரோஹித் சர்மாவின் சாதனையை விராட் கோலியால் எளிதாக முறியடிக்க முடியும் என கூறப்படுகிறது. நடப்பு தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 2 அரைசதங்கள் உட்பட 164 ரன்களை குவித்து உள்ளார்.

மறுபுறம் ரோஹித் சர்மா இதுவரை விளையாடி 4 போட்டிகளில் வெறும் 38 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இதனால் இந்த சீசனில் ரோஹித் சர்மாவின் சிக்ஸ் சாதனையை எளிதாக விராட் கோலியால் முறியடிக்க முடியும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒருபுறம் தற்போதைய ஆர்சிபி அணி மிகவும் வலிமையாக இருக்கும் நிலையில் இந்த முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பும் அந்த அணிக்கு இருப்பதாக ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மோசமாக ஆடிய CSK & MI... கடுமையாக விமர்சித்த பாக். வேகப்பந்து வீச்சாளர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share