ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட்டுகள்... ஃபுல் ஃபார்மில் களமிறங்கிய சிஎஸ்கே!!
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பீல்டிங் சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி சிஎஸ்கே அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையே நடைபெறுகிறது. ஏற்கனவே 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக ஏய்டன் மார்க்கர்ம் மற்றும் நிக்கோலோஸ் பூரான் களமிறங்கினர்.
ஏய்டன் மார்க்கர்ம் 6 ரன்களிலும் பூரான் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்களை 4 ஓவர் முடிவதற்குள் அவுட் ஆக்கி வெளியேற்றியது சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. பின்னர் களமிறங்கிய மிட்செல் மார்ஸ் மற்றும் பதோனி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தனர். அப்போது மார்ஸ் 30 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க: பிளமிங் தந்த தரமான அட்வைஸ்... பூரானை தட்டித்தூக்கிய இளம் வீரர்... தோனிக்கு பாராட்டு!!
பதோனியும் ஜடேஜா பந்துவீச்சில் தோனியிடம் ஸ்டெம்பிங் ஆனார். பின்னர் வந்த பண்ட் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரி என 49 பந்துகளில் 63 ரன்கள் குவித்து தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதேபோல் அப்துல் சமத் 2 சிக்ஸர்கள் அடித்து 11 பந்துகளில் 20 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
ஷர்துல் தாகூர் 6 ரன்களில் ஆட்டமிழக்க லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. ஜடேஜா மற்றும் பதிரானா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 167 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. சிஎஸ்கே ஃபார்ம்க்கு திரும்பியதாகவும் இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஃபீல்டிங்கில் முன்னேறிய சிஎஸ்கே... மார்க்கரம் அடித்த பந்தை பாய்ந்து பிடித்த ராகுல் திருப்பாதி!!