×
 

பிளமிங் தந்த தரமான அட்வைஸ்... பூரானை தட்டித்தூக்கிய இளம் வீரர்... தோனிக்கு பாராட்டு!!

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் கொடுத்த அட்வைஸ் படி பூரானை இளம் வீரர் அவுட் ஆக்கியதோடு தோனியின் செய்லும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வரும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது குறித்து பயிற்சியாளர் பிளமிங் பேசுகையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் நிக்கோலஸ் பூரானை விரைவாக ஆட்டமிழக்க செய்வது அவசியம் என்று கூறியிருந்தார். அதன்படி அவரை சிஎஸ்கே அணியின் இளம் வீரர் தட்டி தூக்கியுள்ளார். 

நிக்கோலஸ் பூரான் ஒரு 30 பந்துகள் களத்தில் நின்றாலே ஆட்டத்தை தலைகீழ் மாற்றி விடுவார். இதனால் பூரான் விக்கெட்டை சிஎஸ்கே அணி எப்படி வீழ்த்தப் போகிறது என்று ரசிகர்கள் யோசித்து வந்தனர். இந்த நிலையில் பூரான், பவர் பிளேவில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது சிஎஸ்கே அணியின் இளம் வீரர் அன்சூல் கம்போஜ் வீசிய பந்து அவருடைய காலில் பட்டது. 

இதையும் படிங்க: ஃபீல்டிங்கில் முன்னேறிய சிஎஸ்கே... மார்க்கரம் அடித்த பந்தை பாய்ந்து பிடித்த ராகுல் திருப்பாதி!!

இதற்கு அவர் அவுட் கேட்க, நடுவர் அவுட் தரவில்லை. இதனால் தோனியிடம் டிஆர்எஸ் எடுங்கள் என்று அவர் தெரிவித்தார். முதலில் யோசித்த தோனி, பின்னர் அந்த வீரரின் கோரிக்கைக்கிணங்க டிஆர்எஸ் கேட்டார். முதலில் தோனிக்கு சந்தேகம் இருந்தது. எனினும் தொடர்ந்து டிஆர்எஸ் எடுங்கள் என்று கூறியதால் இளம் வீரர் தோனியிடம் கேட்டுக்கொண்டார். 

இதனை அடுத்து ரிபிளேவில் பார்த்தபோது பந்து ஸ்டெம்பை அடித்திருக்கும் என கிராபிக்ஸில் கணிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பூரானுக்கு மூன்றாம் நடுவர் அவுட் வழங்கினார். இது ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் தோனி இளம் வீரரின் பேச்சைக் கேட்டு செயல்பட்டது ரசிகர்களிடைய அவருக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது.  

இதையும் படிங்க: சிஎஸ்கே அணியிலிருந்து இந்த வீரர் நீக்கம்.. கம் பேக் கொடுத்த ஷேக் ரசீத்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share