×
 

அவரது பவுலிங் சுத்தமா செட் ஆகாது... சிஎஸ்கே பவுலர் பற்றி முன்னாள் கேப்டன் கருத்து!!

சிஎஸ்கே பவுலர் குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கூறிய கருத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2025 ஐபிஎல் சீசன் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒன்றில் மற்றுமே வெற்றி பெற்றது. மற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் ஒரு ஓவருக்கு 9.9 ரன்கள் என்ற சராசரியில் ரன்களை விட்டுக் கொடுத்து மொத்தம் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.

நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு ஓவர்களில் 46 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி இருந்தார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே நிதீஷ் ராணா அதிரடியாக விளையாடியதால், 19 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். 2024 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். அவரது பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 51.89 என்பதாக மோசமாக இருந்தது. அவரது ஐபிஎல் வரலாற்றிலேயே அதுவே மிக மோசமான பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் ஆகும்.

இதையும் படிங்க: அவரால் இனி இதை செய்ய முடியாது... சிஎஸ்கே வீரர் பற்றி பிளம்மிங் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

அதை தொடர்ந்து இப்போது 2025 ஐபிஎல் தொடரிலும் அஸ்வின் சுமாராகவே செயல்பட்டு வருவது கவலை அளிக்கிறது. இந்த நிலையில் இவரது ஆட்டம் குறித்து முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில், ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது புதிய சகாப்தத்தில் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மற்ற அணிகள் அவர் மீது மரியாதையை வெளிப்படுத்துவார்கள். அணி கூட்டத்தில் அஸ்வினுக்கு எதிராக நாம் 24 அல்லது 28 ரன்கள் வரை எடுக்கலாம், அவருக்கு அதிக விக்கெட்டுகளை விட்டு கொடுக்காமல் ஆட வேண்டும் என்று பேசினார்கள்.

ஆனால், இப்போது இருக்கும் வீரர்கள் அப்படி எல்லாம் நினைப்பதில்லை. அஸ்வினை எப்படி அடித்து ஆடலாம்?, அவரது பந்துவீச்சை மேலும் எப்படி சேதப்படுத்துவது? என்று சிந்திக்கிறார்கள். அஸ்வினின் பந்துவீச்சை அவர்கள் பலமுறை பார்த்து விட்டார்கள். எனவே, அவர் பந்து வீச வரும்போது அதை அடித்து ஆடுவதற்கும் முடிவு செய்து விடுகிறார்கள். மனதளவில் இங்கு மிகப்பெரிய அணுகுமுறை மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக நினைக்கிறேன். அஸ்வின் யாராக இருந்தால் என்ன, பெயர் என்பது முக்கியமே இல்லை, பந்து எப்படி வருகிறது என்பதுதான் முக்கியம் என இப்போது உள்ள வீரர்கள் நினைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.  

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணிக்கு சிக்கல்... பேட்டிங்கில் வில்லனாக மாறி வரும் தோனி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share