×
 

அவரால் இனி இதை செய்ய முடியாது... சிஎஸ்கே வீரர் பற்றி பிளம்மிங் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

சிஎஸ்கே வீரர் குறித்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோனி வழக்கமாக 7 ஆம் வரிசையில் இறங்குவது வழக்கம். ஆனால் பெங்களூர் அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் தோனி 9 ஆம் வரிசையில் இறங்கினார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. பேட்டிங் வரிசை மாறுதல் குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். இதை அடுத்து நேற்று ராஜஸ்தான் அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் நடைபெற்ற போட்டியில் தோனி வழக்கம் போல் 7ஆம் வரிசையில் இறங்கி பேட்டிங் செய்தார். இருந்த போதிலும் அவரது பழைய ஆட்டம் இல்லாதது போல் ரடிகர்கள் உணர்ந்தனர்.

11 பந்துகளில் வெறும் 16 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். இதுக்குறித்தும் பேட்டிங் வரிசை குறித்தும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்து. அதற்கு பதிலளித்த அவர், அவரது பேட்டிங் வரிசை போட்டியின் சூழ்நிலை மற்றும் நேரம் சார்ந்தது. இது குறித்த முடிவை தோனி தான் எடுக்கிறார். அவரது உடல் மற்றும் முழங்கால் இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை. அவர் நன்றாக நடந்தாலும் அதில் சில இடர்பாடுகள் உள்ளன.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணிக்கு சிக்கல்... பேட்டிங்கில் வில்லனாக மாறி வரும் தோனி..!

அவரால் தொடர்ந்து நின்று பேட்டிங் செய்வது முடியாது. எனவே, ஒவ்வொரு நாளிலும் அவர் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயல்படுகிறார். இன்றைக்குப் போல போட்டி சமநிலையில் இருந்தால் அவர் சற்று முன்பே பேட்டிங் செய்வார். மற்ற வீரர்கள் தங்களின் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே, அவர் அதற்கான சமநிலையை சிந்தித்து செயல்படுகிறார்.

நான் கடந்த ஆண்டே கூறினேன், தோனி எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்கவர். தலைமை பண்பு மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அவர் சிறந்து விளங்குகிறார். அவரை 9 அல்லது 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய வைக்கலாம். ஆனால், அவர் இதுவரை அதை செய்யவில்லை. அவர் 13 அல்லது 14 வது ஓவரிலிருந்து பேட்டிங் செய்ய முற்படுகிறார். களத்தில் யார் இருக்கிறார் என்பதை வைத்து அவர் அந்த முடிவை எடுக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி இலக்கை எட்ட முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியுற்றது. இதேபோல் பெங்களூர் அணியுடன் நடந்த போட்டியிலும் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இவ்வாறு தொடர் தோல்விகளால் ஒருபுறம் ரசிகர்கள் கவலையடைந்துள்ள நிலையில் மறுபுறம் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: இனி ஃபுல்டாஸ் பந்துதான்... அஸ்வின் அதிரடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share