சவுரவ் கங்குலி கார் விபத்து… முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானுக்கு என்னாச்சு..?
ஓட்டுநர் திடீரென பிரேக் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின. இதில், கங்குலியின் வாகனத்தையும் பின்னால் வந்த கார்கள் மோதின.
மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் எக்ஸ்பிரஸ் சாலையில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தபோது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் கார் மோதி விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பினார் கங்குலி.
தண்டன்பூர் அருகே இந்த சம்பவம் நடந்தது. கங்குலியின் வாகனத்தை தொடர்ந்து வந்த லாரி ஒன்று திடீரென முந்திச் செல்ல முயன்றார். ஓட்டுநர் திடீரென பிரேக் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின. இதில், கங்குலியின் வாகனத்தையும் பின்னால் வந்த கார்கள் மோதின.
ஆனால், அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், கங்குலியின் காருக்கு பின்னால் வந்த இரண்டு கார்கள் அவரது காடுக்கு சேதத்தை ஏற்படுத்தின. இதனால் பதற்றமான கங்குலி, பர்த்வான் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு 10 நிமிடங்கள் சாலையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனாலும், அவர் திட்டமிட்டபடி அந்த விழாவிற்கு சென்று கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: சொந்த மண்ணில் பாகிஸ்தானை சாய்த்த நியூசிலாந்து? வெற்றிக்கு காரணம் என்ன?
இந்த அசாதரண சம்பவம் நடந்தபோதும், கங்குலி அமைதி காத்து, பர்த்வானில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உரிய நேரத்தில் சென்று பங்கேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் மாணவர்கள், பிரமுகர்கள் மத்தியில் அவர் உரையாடினார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து விவாதித்தார். அவரது புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கையின் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.
அமைதியான நடத்தை, கேப்டன்சிக்கு பெயர் பெற்ற கங்குலி, தனது கிரிக்கெட் கேரியரில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். கிரிக்கெட் நிர்வாகப் பணிகளில் தனது கடந்த கால அனுபவத்திற்கு கூடுதலாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் முன்பு தலைவர் பொறுப்பையும் ஏற்றிருந்தார் சவுரவ் கங்குலி.
இப்போது பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு முக்கியப் பதவையை ஏற்றுள்ளார் கங்குலி. அக்டோபர் 2024 இல், அவர் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்போர்ட்ஸில் கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பெண்கள் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி உட்பட அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் அவர் பங்களிப்பை செய்து வருகிறார்.
2025 பெண்கள் பிரீமியர் லீக் சீசனுக்கு முன்னதாக, டெல்லி கேபிடல்ஸ் அணியை வலுப்படுத்துவதில் கங்குலி முக்கிய பங்கு வகித்தார்.பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தில் இருந்து புதிய திறமையாளர்களை கொண்டு வந்தார். அணியின் திறமையில் கங்குலி மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார். அணியை சாம்பியன்ஷிப் வெற்றியை நோக்கி வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் போட்டி: கள்ளச் சந்தையில் விறுவிறு... ஒரு டிக்கெட் விலை இத்தனை லட்சங்களா..?