×
 

IPL 2025: எம்.எஸ்.தோனியின் கடைசி சீசன் எது.? சென்னை ரசிகர்களுக்கு மெசேஜ் சொன்ன ஸ்ரீகாந்த்.!!

ஐபிஎல்லில் எம்.எஸ். தோனியின் கடைசி போட்டி எது என்பது யாருக்கும் தெரியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ். தோனி விளையாடும் கடைசி தொடர் என்று விளம்பரம் செய்யாததுதான் பாக்கி. அந்த அளவுக்கு தோனி புராணம் பாடப்பட்டது. தோனியின் கடைசி தொடர் என்று கருதிய ரசிகர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் குவிந்தனர். சென்னை அணி வெளி மைதானங்களில் விளையாடினாலும் மஞ்சள் ஜெர்சியில் வந்து தோனிக்கு ஆதரவுக் குரல் எழுப்பினர். 2025 சீசனில் தோனி விளையாடுவாரா இல்லையா என்கிற பட்டிமன்றம் வழக்கம்போல் சூடுபிடித்தது.

ஆனால், கடந்த நவம்பரில் ஐபிஎல் மெகா ஏலத்தில் எம்.எஸ். தோனி ‘அன்கேப்டு’ வீரராக சென்னை அணியில் தக்க வைக்கப்பட்ட பிறகு, அவர் 2025 சீசனிலும் விளையாடுவது உறுதியானது. தற்போது  ஐ.பி.எல் 18-வது சீசனுக்கு தோனி தயாராகிவிட்டார். சென்னை அணி தனது முதல் போட்டியில் சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. இந்த சீசன்தான் தோனிக்கு கடைசி சீசன் என்கிற பரபரப்பு மீண்டும் எழுந்துவிட்டது.

இதையும் படிங்க: IPL 2025: வயசானாலும் எம்.எஸ்.தோனியின் ஃபிட்னெஸ்ஸும் ஸ்டைலும் மாறவே இல்லை.. புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்..!!

இந்நிலையில் எம்.எஸ். தோனியின் கடைசி சீசன் எது என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இன்றும் விக்கெட் கீப்பிங்கில் தோனிதான் நம்பர் ஒன். எப்படிப் பார்த்தாலும் தோனி கேப்டன்சி மாதிரி வருமா? சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ்தான். ஆனால், பின்னால் மூளையாக இருப்பது தோனிதான். அவருடைய கடைசி போட்டி எதுவென்று யாருக்கும் தெரியாது. அவருக்குமே கூட தெரியாது. ஆனால், தன்னுடைய கடைசி போட்டியை சென்னையில் ஆடுவேன் என்று தோனி கூறியிருக்கிறார். அவருடைய கடைசி சீசன் 2025 அல்லது 2026, 2027 என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று ஸ்ரீகாந்த் கூறினார்.

இதையும் படிங்க: ஐபிஎல்லில் கேப்டன் பதவியா.? வேண்டவே வேண்டாம் சாமி.. தலைத் தெறிக்கும் கே.எல். ராகுல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share