×
 

கவுதம் கம்பீர் வேஸ்ட்.. விவிஎஸ் லட்சுமணனை பயிற்சியாளர் ஆக்குங்கள்.. மாஜி வீரர் தடாலடி!

கவுதம் கம்பீருக்கு பதிலாக விவிஎஸ் லட்சுமணனை இந்திய அணியின் பயிற்சியாளராகக் கொண்டு வந்திருக்கலாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆனதற்கு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோல்வி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி, முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்தியா தகுதி பெறாதது என இறங்கு முகமாக உள்ளது. இதனால், பலரும் பயிற்சியாளர் கம்பீரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் கம்பீருக்கு எதிராக விமர்சனங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் கவுதம் கம்பீரை கடுமையாக விமர்சித்துள்ளார் பனேசர். "கம்பீரைப் பொறுத்தவரை இந்தப் பயிற்சியாளர் பணி மிகவும் கடினமானது. அவரே ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் பெரிதாக சோபித்ததில்லை. 

ஆஸ்திரேலியாவில் அவருடைய சராசரி வெறும் 23தான். இங்கிலாந்திலும் அவருடைய சராசரி பெரிதாக இல்லை. ஸ்விங் பந்துகளை அவரே சரியாக விளையாடியதில்லை. என்னைப் பொறுத்தவரை கம்பீர் ஒரு சீரியஸான பயிற்சியாளர் என்று நான் நினைக்கவில்லை.

இதையும் படிங்க: அதான் நான் இருக்கேன்ல்ல.. இந்திய அணியில் இடம்பிடிக்க முட்டிமோதும் ஸ்ரேயாஸ் ஐயர்!

கம்பீரை டி20, ஒரு நாள் போட்டிகளுக்கு மட்டும் பயிற்சியாளர் ஆக்கியிருக்கலாம்.  விவிஎஸ் லட்சுமணனை பயிற்சியாளராகக் கொண்டு வந்திருக்கலாம். இப்போதும் லட்சுமணனை  கம்பீருக்கு உதவும் வகையில் பேட்டிங் பயிற்சியாளராகக் கொண்டு வரலாம்.  லட்சுமணன், டிராவிட் போன்றவர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் ஆடிய அனுபவமிக்கவர்கள். ஆனால், கம்பீரை பிசிசிஐ தீவிரமான பயிற்சியாளராக கருதுகிறதா என்று தெரியவில்லை. ஆனால்,  நான் அப்படி நம்பவில்லை" என்று மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் ஷமிக்கு வாய்ப்பு..!T20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share