200-ஐ கடந்த இலக்கு… அபார ஆட்டத்தால் சேஸ் செய்து வெற்றி பெற்ற குஜராத் அணி!!
டெல்லி அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது.
2025 ஐபிஎல் சீசனில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதில் மதியம் நடந்த போட்டியில் குஜராத் அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதை அடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் பொரல் மற்றும் கருண் நாயர் களமிறங்கினர். அபிஷேக் போரல் முதல் ஓவரிலேயே 4, 6, 4 என்று விளாசினார். ஆனால் 2வது ஓவரில் அபிஷேக் போரல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேஎல் ராகுல் மற்றும் கருண் நாயர் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை 4 ஓவர்களிலேயே 52 ரன்களாக உயர்த்தினர்.
கேஎல் ராகுல் 28 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த அக்சர் படேல் பவுண்டரி, சிக்ஸ் உட்பட 14 ரன்கள் விளாசினார். கருண் நாயர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஸ்டப்ஸ் அக்சர் படேலுடன் இணைந்து விக்கெட்டை இழக்காமல் உயர்த்தினர். அப்போது சிராஜ் பவுலிங்கில் ஸ்டப்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து அக்சர் படேல் 38 ரன்களிலும், விப்ராஜ் நிகம் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த அஷுதோஷ் சர்மா - டோனவன் ஃபெரீரா கூட்டணி அபராமாக ஆடினர். அஷுதோஷ் சர்மா 19 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையும் படிங்க: சொந்த மண்ணில் வைத்தே RCB-ஐ துவைத்து எடுத்த PBKS... 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!
இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது. இதை அடுத்து 204 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர். சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 21 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் தொடக்கம் முதல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் ரூதர்போர்டு 34 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்ட்ரியும் அடங்கும். பின்னர் ராகுல் தெவாடியா - ஜோஸ் பட்லர் கூட்டணி இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். ஜோஸ் பட்லர் 54 பந்துகளில் 11 பவுண்ட்ரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் விளாசி 97 ரன்கள் குவித்தார். ராகுல் தெவாடியா 3 பந்துகளில் 11 ரன்கள் குவித்தார். இதன்மூலம் குஜராத் அணி 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதை அடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: கொஞ்சம் அசந்தா அவ்வளவுதான்... தோனியை பற்றி புட்டு புட்டு வைத்த ரோஹித் சர்மா!!