×
 

கொஞ்சம் அசந்தா அவ்வளவுதான்... தோனியை பற்றி புட்டு புட்டு வைத்த ரோஹித் சர்மா!!

கடைசி நிமிடத்தில் கூட தோனி ஆட்டத்தை சிஎஸ்கே பக்கம் திருப்பிவிடுவார் என்று மும்பை முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற இருந்தது. பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற இருந்த போட்டி, தற்போது மழை காரணமாக தொடங்காமல் உள்ளது. அந்த மைதானத்தில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதை அடுத்து மழை நின்ற பிறகு ஆட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

தாமதமாக தொடங்கியதால் 20 ஓவர் ஆட்டம் 14 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. நாளை மறுநாள் வான்கடே மைதானத்தில் மும்பை அணியும் சென்னை அணியும் விளையாடவுள்ளது. இதுவரை மும்பை அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது.

இதையும் படிங்க: ஆட்டத்தை கெடுத்த மழை.. RCB vs PBKS போட்டி நடக்குமா? வெளியான முக்கிய தகவல்!!

அதேபோல் சென்னை அணி இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தோனி குறித்து ரோஹித் சர்மா அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைராகியுள்ளது. அவர் பேசுகையில், தோனி நீண்ட ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கேப்டனாக ஏராளமான வெற்றிகளை பெற்றதோடு, கோப்பைகளையும் வென்றிருக்கிறார்.

அதனால் தோனிக்கு எதிராக விளையாடும் போது கொஞ்சம் கூட ரிலாக்ஸாக இருக்க முடியாது. எவ்வளவு எளிதாக எந்த போட்டியில் இருந்து தோனி பிடியை விட்டுவிட மாட்டார். தோனிக்கு எதிராகவும், சிஎஸ்கே அணிக்கு எதிராகவும் விளையாடும் போது ஒவ்வொரு நொடியும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கடைசி நிமிடத்தில் கூட ஆட்டத்தை தோனி மாற்றிவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பேட்டிங்கில் கோட்டை விட்ட SRH... அதிரடி ஆட்டத்தால் MI அசால்ட் வெற்றி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share