×
 

பேட்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா அணி... ஈசியாக வெற்றியை கைப்பற்றியது குஜராத் அணி!!

குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் குஜராத் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில்  அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். 36 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்த சாய் சுதர்ஷன் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். இதனை அடுத்து பட்லர் கில்லுடன் ஜோடி சேர்ந்த அதிரடி காட்டினார்.

பட்லர் எட்டு பவுண்டரிகள் விளாச 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம் கில் 3 சிக்சர் ,10 பவுண்டரி என 55 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். ராகுல் தே வாத்தியா டக் அவுட்டாக, தமிழக வீரர் ஷாரூக்கான் ஐந்து பந்துகளில் 11 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க: 42 பவுண்டரிகள் 15 சிக்சர்கள் அடித்து விளாசல்... பந்துகளை பதம்பார்த்த சாய் சுதர்சன்!!

199 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் தொடக்கம் முதலே தடுமாறினர்.  ரஹ்மானுல்லா 1 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் சுனில் நரைன் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர் 14 ரன்களில் அவுட் ஆனார். இவரை தொடர்ந்து களமிறங்கிய அஜின்கியா ரகானே 36 பந்துகளில் அரை சதம் விளாசினார். இவரது ஆட்டம் அணியும் கொல்கத்தா அணி நம்பிக்கை அளித்தது.

ஆனால் அடுத்த பந்திலேயே அவர் அவுட் ஆகி வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்ட்ரே ரசல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரிங்க்கு சிங் 17 ரன்களில் அவுட் ஆக, மறுபுறம் மொயீன் அலி டக் அவுட் ஆனார். இதனால் கொல்கத்தா அணியின் இலக்கை எட்ட முடியாமல் போனது. இறுதியாக வந்த இரமன்தீப் 1 ரன்னில் ஆவுட் ஆனார். மறுமுனையில் ஹர்சித் ரானா 1 ரன் சேர்த்திருந்தார். இதன் மூலம் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: தொடர் தோல்விகளை சந்தித்த CSK.. பயிற்சியாளர் பிளமிங்கை வெளுத்து வாங்கிய சுரேஷ் ரெய்னா!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share