×
 

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி... பவுலர்களிடம் சுருண்ட மும்பை இந்தியன்ஸ் அணி!!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2025 ஐபிஎல் சீசனின் 9வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய மும்பை அணியின் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 27 பந்தில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்து 38 ரன்கள் குவித்தார். பின்னர் ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஜோஸ் பட்லர் 24 பந்தில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்து 39 ரன்கள் எடுத்த நிலையில் முஜிப் உர் ரஹ்மான் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுபுறம் சாய் சுதர்சன் தனது 2வது அரைசதத்தை விளாசினார். 41 பந்தில் 61 ரன்கள் குவித்த அவர், டிரண்ட் போல்ட்டில் யார்க்கரில் எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் களமிறங்கிய ஷாருக்கான் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ராகுல் தெவாட்டியா டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரூதர் போர்ட் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: IPL 2025: 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்..!

இதை அடுத்து இறுதி ஓவரில் களமிறங்கிய ரபடா மற்றும் ரஷித் கான் விளையாடியதில் குஜராத் அணி 190 ரன்களை கடந்தது. இதன்மூலம் குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 197 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை  அணி தொடக்கம் முதலே தடுமாறியது. முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா 8 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து ரயன் ரிக்கல்டன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய திலக் வர்மா நிதானமாக ஆடி 39  ரன்களை குவித்து அவுட் ஆனார்.

பின்னர் வந்த ராபின் மின்ஸ் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் சூர்யகுமார் யாதவ் ஆபாரமாக ஆடி ரன்களை குவித்து வந்தார். அவருக்கு ஹர்திக் பாண்டியாவும் ஒத்துழைப்பு வழங்கினார். இருவரும் சேர்ந்து வெற்றி இலக்கை எட்ட தொடங்கினர். ஆனால் அவர்கள் இருவரின் விக்கெட்டுகளும் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டது. சூர்யகுமார் யாதவ் 48 ரன்களிலும் ஹர்திக் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த நமன் திர் மற்றும் மிட்செல் சான்ட்னர் இறுதி வரை ஆடினர். ஆனால் அவர்களால் இலக்கை எட்ட முடியவில்லை. இதன் மூலம் 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: இன்றைய ஆட்டம் இப்படி தான் இருக்கும்... அணிக்கு திரும்பிய ஹர்திக் கருத்து!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share