×
 

இன்றைய ஆட்டம் இப்படி தான் இருக்கும்... அணிக்கு திரும்பிய ஹர்திக் கருத்து!!

மும்பை அனிக்கு திரும்பிய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இன்றைய ஆட்டம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

2025 ஐபிஎல் சீசனின் 9வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து குஜராத் அணி பேட்டிங் பிடித்து வருகிறது. இந்த ஆட்டத்தில் மும்பை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சிஎஸ்கே அணி எதிராக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக விளையாடிய விக்னேஷ் புதூர் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை.

அவர் இன்றைய போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த ஆட்டம் குறித்து பேசிய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கின்றோம். ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று எங்களுக்கு தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு இங்கு களிமண் பயன்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது செம்மண் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என நினைக்கின்றேன்.

இதையும் படிங்க: ரெய்னாவை ஓரம் கட்டிய தோனி... தோல்வியிலும் வரலாறு படைத்த கூல் கேப்டன்!!

இந்த போட்டிக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராகி வந்திருக்கின்றோம். கடந்த ஆண்டு இங்கு விளையாடும் போது எங்களால் வெற்றி அருகே வந்து தோல்வியை தழுவி விட்டோம். ஆனால் இம்முறை நாங்கள் வெற்றி பெறுவோம் என நினைக்கின்றேன். எங்கள் வீரர்கள் அனைவரும் இந்த போட்டிக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கின்றோம். இன்றைய ஆட்டத்தில் நான் அணிக்கு திரும்பி இருக்கின்றேன்.

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட முயற்சி செய்கின்றோம். போட்டியை மகிழ்ந்து விளையாடுகின்றோம் என்று  தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய குஜராத் அணி கேப்டன் கில், இங்கு அதிக முறை விளையாடி இருக்கின்றோம். எனவே எங்களுக்கு எந்த ஒரு மாறுதலும் கிடையாது. ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதன் பிறகு இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.

இதுவே சேஸ் செய்வதாக இருந்தால் இலக்கை எப்படி தொடுவது என்பது குறித்து திட்டமிட வேண்டும். கடந்த போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும், பல நல்ல விஷயங்கள் இருந்தது. நடு ஓவர்களில் கொஞ்சம் மெதுவாக நாங்கள் விளையாடிவிட்டோம். இருப்பினும் 14 ஓவர்களில் 200 ரன்கள் மேல் அடித்தோம். எங்கள் அணியில் எந்த மாற்றமும் என்று செய்யவில்லை. வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் வகையில் எங்களுடைய பேட்டிங் வரிசையை அமைத்திருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிஎஸ்கே தோல்விக்கு இதுதான் காரணம்... மௌனம் கலைத்த பயிற்சியாளர் பிளெமிங்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share