'பாகிஸ்தானுடன் இந்தியா வெற்றி பெறாது..!' இதயத்தை உடைத்த ஐஐடி பாபா- கர்மாவை வெல்வாரா சர்மா..?
ரசிகர்கள் அவரை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் என கடுப்பாகி வருகின்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டியால் ரசிகர்களின் இதயத்துடிப்பு அதிகரித்துள்ளது. துபாயில் தங்கள் அணி வெற்றி பெறுவதை அனைவரும் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் இந்தப் பெரும் போருக்கு முன்பு, பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா காரணமாக செய்திகளில் இடம்பிடித்த ஐஐடி பாபா, ஒரு மனதை உடைக்கும் கணிப்பை வெளியிட்டுள்ளார். போட்டிக்கு முன்பு, அவரது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில், இந்த முறை சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி எப்படியும் வெல்லப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். அவரது கணிப்பால் ஐஐடி பாபா மீது ரசிகர்கள் மிகவும் கோபமாக உள்ளனர்.
ஐஐடி பாபா வைரலான வீடியோவில் 'நான் இதை முன்பிருந்தே வருகிறேன். இந்த முறை இந்தியா வெற்றி பெறாது. விராட் கோலி உள்ளிட்ட அனைவரையும் தங்கள் சிறந்த முயற்சிகளை எடுத்து வெற்றி பெறச் சொல்லுங்கள். அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். இப்போது கடவுள் பெரியவரா? அல்லது நீங்கள் பெரியவரா என்பதைப் பார்ப்போம். இந்த முறை நான் அதற்கு நேர்மாறாகச் செய்திருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார். அவரது கணிப்பால் ரசிகர்கள் கோபமடைந்து சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்வினைகளை அளித்தனர்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்து வீரரை வைத்தே இங்கிலாந்தை சாய்த்த ஆஸ்திரேலியா: வரலாற்று சேஸிங் சாத்தியமானது எப்படி?
''போட்டியை வென்ற பிறகு பேசுவோம்'' என பல ரசிகர்கள் கூறி வருகின்றனர். சில ரசிகர்கள் அவரை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் என கடுப்பாகி வருகின்றனர். ஒரு ரசிகர், 'அவர் கர்மாவை நம்புகிறார். நாங்கள் ரோஹித்' சர்மாவை நம்புகிறோம்' என்று கூறியுள்ளார்.
ஐ.சி.சி-யில் துபாயில் நடந்த இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகளில், இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.இந்திய அணி துபாய் மைதானத்தில் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்தது. துபாயில் நடந்த 22 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் 8 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது தவிர, இந்த மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ஐ.சி.சி போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே 21 போட்டிகள் நடந்துள்ளன. அதில் இந்தியா 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, பாகிஸ்தான் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆகவே ஐ.சி.சி போட்டிகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிங்க: ‘இந்தியா உங்களை தோற்கடிக்கும்...’ நாக்கில் விஷம் ஏற்றி பாகிஸ்தானை உசுப்பேற்றும் அக்தர்..!