×
 

சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா… மொத்த அணியையும் அல்டிமேட்டாக கவுரவித்த பிரதமர் மோடி..!

இந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கிடையில், இந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி  சமூக வலைதளமான எக்ஸ் பதிவில்,'ஒரு அசாதாரண விளையாட்டு.. ஒரு அசாதாரண வெற்றி! ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வந்ததற்காக எங்கள் கிரிக்கெட் அணியை நினைத்து பெருமைப்படுகிறோம். இந்திய அணி வீரர்கள் தொடர் முழுவதும் அற்புதமாக செயல்பட்டனர். எங்கள் அணியின் சிறப்பான செயல்திறனுக்கு வாழ்த்துக்கள்'' என மகிழ்சியை பகிர்ந்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், 'வரலாற்றை உருவாக்கிய வெற்றி' என்று கூறியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அற்புதமான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். உங்கள் அனல் பறக்கும் ஆற்றலும், களத்தில் நீங்கள் காட்டிய தவிர்க்க முடியாத ஆதிக்கமும் நாட்டைப் பெருமைப்படுத்தியதுடன், கிரிக்கெட்டின் சிறப்பிற்கு ஒரு புதிய தரத்தை அமைத்தது. நீங்கள் எப்போதும் அற்புதமாக செயல்பட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: தூள் தூளாய் நொறுங்கிய நியூசி அணி.. கோப்பையை வென்று இந்தியா சாதனை..!

இந்திய அணியின் வெற்றியை வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வர்ணித்துள்ளார். அவர் தனது பதிவில், 'வரலாற்று வெற்றி... சாம்பியன்களுக்கு வாழ்த்துகள்...நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சாம்பியன்ஸ் டிராபியை வென்று பண்டிகை காலத்தை (ஹோலி) வெற்றியின் வண்ணங்களால்  வண்ணமயமாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றிய இந்திய கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு வீரரையும் நினைத்து நாடு பெருமை கொள்கிறது. உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கு எல்லையற்ற நல்வாழ்த்துக்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி  'சாம்பியன்ஸ் டிராபி-2025 இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வெற்றி உங்கள் அயராத கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பக்தியின் விளைவால் நிகழ்த்தப்பட்டுள்ளன. நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்' என அகமகிந்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில், 'அருமையான வெற்றி, வீரர்களே.. நீங்கள் ஒவ்வொருவரும் கோடிக்கணக்கான இதயங்களை பெருமையால் நிரப்பியுள்ளீர்கள். இந்தப் போட்டியில் இந்திய அணியின் அற்புதமான செயல்திறன், அற்புதமான தனிப்பட்ட செயல்திறன் மற்றும் களத்தில் முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள். உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது. வாழ்த்துக்கள், சாம்பியன்களே!' எனத் தெரித்துள்ளார்.


 

இதையும் படிங்க: இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டி .. முதல் பகுதி நிறைவு..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share