×
 

ரோஹித் சர்மாவுக்கு இப்படி ஒரு பெருமை.. உலகில் எந்த கேப்டனும் செய்யாத சாதனை படைத்து அசத்தல்.!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 4 விதமான தொடர்களிலும் இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்து சென்ற முதல் கேப்டன் என்கிற பெருமையை இந்தியாவின் ரோஹித் சர்மா படைத்தார்.

ஐசிசி அமைப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என நான்கு தொடர்களை நடத்தி வருகிறது. இந்த நான்கு தொடர்களின் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணியை ரோஹித் சர்மா அழைத்துச் சென்றுள்ளார். இந்தச் சாதனையை உலகில் வேறு எந்த கேப்டனும் செய்யவில்லை. மேலும், இந்த சாதனையை கேப்டன் ரோஹித் சர்மா 2023 - 2025 காலகட்டம் என 2 ஆண்டுகள் இடைவெளியில் செய்துள்ளார்.

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. அதில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து ரோஹித் தலைமையிலான இந்திய அணி விளையாடியிருந்தது. பின்னர் 2023இல் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தகுதி பெற்றது. அந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா விளையாடியது.



பிறகு 2024இல் நடைபெற்ற டி20 உலகப் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கும் ரோஹித் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அப்போது தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி கோப்பை வென்றது. தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் கோபைக்கான இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அல்லது நியூசிலாந்து விளையாடுமா என்பது இன்று தெரிந்துவிடும்.

ஆக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை என 4 விதமான தொடர்களுக்கும் இந்திய அணியை  ரோஹித் சர்மா அழைத்துச் சென்றுள்ளார். மேலும் ரோஹித்தின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில் இந்தச் சாதனையை அவர் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கிங்னா சும்மாவா...ஒரே போட்டியில் லிஸ்ட் போட்டு சாதனை படைத்த கோலி!!

இதையும் படிங்க: அபார வெற்றி.. மிரட்டலாக இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்தியா!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share