ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வா..? சான்ஸே இல்லை.. கெத்தாக அறிவித்த ரோஹித் சர்மா.!
விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று இப்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இதன்மூலம் 2013இல் எம்.எஸ். தோனி சாம்பியன்ஸ் கோப்பை வென்ற பிறகு ரோஹித் சர்மா வென்றுள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்பாகவே இத்தொடருடன் ரோஹித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்று ஊகங்கள் கிளம்பின.
கடந்த ஆண்டு வெஸ்ட்இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்தார். அதனால், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றால், கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுவிடுவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த ஊகங்கள் அனைத்துக்கும் ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஐசிசி கோப்பை பரிசளிப்பு விழாவில் ஓய்வு குறித்து ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்படது. இதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, "ஒரு விஷயத்தை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது ஓய்வு பற்றிய கேள்விக்கே இடமில்லை. ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெற போவதில்லை. இதன்மூலம் என்னுடைய ஓய்வு பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்" என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை தட்டி தூக்கியது ரோஹித் படை.. எம்.எஸ். தோனிக்கு பிறகு ரோஹித் சாதனை.!
இதையும் படிங்க: இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டி .. முதல் பகுதி நிறைவு..