×
 

தினேஷ் கார்த்திக் என்னை புதிய வீரராக மாற்றி வருகிறார்... மனம் திறந்த RCB வீரர்!!

ஆர்சிபி அணியில் தான் கம்பேக் கொடுத்ததற்கு முக்கிய காரணம் தினேஷ் கார்த்திக் தான் என ஜித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில் இன்றைய போட்டி ஆர்சிபி அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற உள்ளது. இந்த  தொடரில் ஆர்சிபி அணியின் டாப் ஆர்டரும் மிடில் ஆர்டரும் மிகச்சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி அணி வழக்கமாக 3 பேட்ஸ்மேன்களை மட்டுமே வைத்திருப்பர். இதனால் விராட் கோலி தனது ஸ்டைலில் விளையாட முடியாமல் இருந்தார். ஆனால் இந்த முறை ஆர்சிபி அணி புது விதமாக களமிறங்கியுள்ளது.

டாப் ஆர்டரில் பில் சால்ட், விராட் கோலி, படிக்கல் ஆகியோரையும், கேப்டன் ரஜத் பட்டிதார் நம்பர் 4 வரிசையிலும் களமிறக்கி வருகிறது. மிடில் ஆர்டரில் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்டியா ஆகிய 4 பேட்ஸ்மேன்களும் விளையாடி வருகிறார்கள். இதனால் விராட் கோலி ரன்கள் சேர்க்கவில்லை என்றாலும், அந்த அணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 200 ரன்களுக்கு மேல் விளாசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதிலும் ஃபினிஷராக களமிறங்கும் ஜித்தேஷ் சர்மா இந்த சீசனில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 பந்துகளில் 40 ரன்களை விளாசினார்.

இதையும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் பெரும் சாதனை... ரோஹித் சர்மாவை ஓவர்டேக் செய்வாரா விராட் கோலி?

இதன் மூலம் தினேஷ் கார்த்திக் விட்டுச் சென்ற இடத்தை ஜித்தேஷ் சர்மா நிரப்பியுள்ளார். இந்த நிலையில் ஆர்சிபி அணியில் தான் கம்பேக் கொடுத்ததற்கு முக்கிய காரணம் தினேஷ் கார்த்திக் தான் என ஜித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில், ஐபிஎல் பயணம் மிகச்சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின், தினேஷ் கார்த்திக் உடன் பணியாற்றி வந்தேன். நான் இப்போதும் விளையாடும் ஷாட்கள் ஏராளமானவை, தினேஷ் கார்த்திக் ஆடிய ஷாட்கள்தான். அவர் என்னை புதிய வீரராக மாற்றி வருகிறார். என்னால் மைதானத்தில் 360 டிகிரியிலும் ஷாட்களை விளையாட முடியும் என்று நம்பிக்கையுடன் பயிற்சி அளிக்கிறார்.

கடந்த சீசன் எனக்கு மோசமான ஒன்றாக அமைந்தது. மனநிலையில் சரியாக இல்லை. எதிர்காலத்தை பற்றிய சிந்தனையிலேயே இருந்தேன். தினேஷ் கார்த்திக்கை சந்தித்து இதுகுறித்து பேசிய போது, அவர் எல்லா மனிதர்களும் செய்யும் தவறுதான். இது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் இல்லை. அனைவருக்கும் நடக்கக் கூடிய தவறுகள் தான். அதேபோல் என்னுடைய நம்பிக்கை எப்போதும் எவ்வளவு ரன்கள் அடிக்கிறேன் என்பதில் வைக்க மாட்டேன். எப்படி தயாராகிறேன், எப்படி பயிற்சி செய்கிறேன் என்பதை பொறுத்தே அமையும். ஒருவேளை நான் அடிக்கும் ரன்களில் நம்பிக்கை வைத்தால், அது எப்போதும் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். அதேபோல் பயிற்சியின் போது அதீத நம்பிக்கையுடன் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனுக்கு அபராதம்... இதுதான் காரணமாம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share