×
 

இதுக்கு நான் தான் காரணம்... தன் மீது பழி போட்டுக்கொண்ட KKR கேப்டன்!!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கு தான் தான் காரணம் என கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அனியும் கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 111 ரன்கள் குவித்தது. 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 95 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோரை வெற்றிகரமாக தற்காத்துக் கொண்ட அணி என்ற பெருமையை பஞ்சாப் அணி பெற்று இருக்கிறது.

இந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கின்றேன். இது நிச்சயம் எட்டக்கூடிய இலக்கு தான். ஆனால் நான் தவறான ஷார்ட் ஒன்றை ஆடினேன். அதிலிருந்து தான் இந்த சரிவு தொடங்கியது. அப்போது நான் டிஆர்எஸ் எடுக்க விரும்பவில்லை. நான் அவுட்டா இல்லையா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இது நிச்சயம் எளிய இலக்கு தான். ஆனால் ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது.

இதையும் படிங்க: ஒருநாள் தொடரில் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை.. பிசிசிஐ அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

அதேசமயம் நாங்கள் ஒரு பேட்ஸ்மேன்களாக இந்த போட்டியில் மிகவும் மோசமாக விளையாடினோம். பஞ்சாப் அணி பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். நாங்கள் பொறுப்பில்லாமல் விளையாடியதே தோல்விக்கு காரணம் என நினைக்கின்றேன். ஒட்டுமொத்த அணியின் தவறுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன். தற்போது என் தலையில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது.

மிகவும் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றேன். எனினும் முதலில் நான் அமைதியாக வேண்டும். அதன் பிறகு எவ்வாறு தோற்றோம் என்பது குறித்து ஆராய்ந்து அதன்பின் தான் எங்கள் அணி வீரர்களிடம் பேசுவேன் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே பஞ்சாப் அணியின் வீரர் சாகல் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய சுனில் நரேனின் சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: KKR-ன் சோலியை முடிச்சுவிட்ட PBKS அணி... 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share