×
 

KKR-ன் சோலியை முடிச்சுவிட்ட PBKS அணி... 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

கொல்கத்தா அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி பஞ்சாப் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரியன்ஷ் ஆர்யா 12 பந்துகளில் 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்கொண்ட 2வது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். 

இது ஆட்டத்தின் திருப்புமுனையாகவும் பார்க்கப்படுகிறது. அவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜோஷ் இங்கிலிஸ் 2 ரன்களிலும் பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த நேஹல் வாதேரா 10 ரன்களிலும் மேக்ஸ்வெல் 7 ரன்களிலும் சூரியன் ஷெட்ஜ் 4 ரன்களிலும் மார்கோ ஜான்சன் 1 ரன்னிலும் ஷஷங்ச் சிங் 18 ரன்களிலும் சேவியர் பார்ட்லெட் 11 ரனகளிலும் ஆட்டமிழந்தனர். அர்ஷ்தீப் சிங் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார். 15.3 ஓவரிலேயே பஞ்சாப் அணி அனைத்து  விக்கெட்டுகளை இழந்தது. இதனால் வெறும் 111 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது.

இதையும் படிங்க: டக் அவுட் ஆன ஸ்ரேயாஸ் ஐயர்... ரன்களை குவிக்க தடுமாறிய பஞ்சாப் அணி!!

இதை அடுத்து 112 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி தொடக்க வீரர்களாக சுனில் நரைனும் டிகாக்கும் களமிறங்கினர். ஆனால் பஞ்சாப் அணியின் அபாரமான பந்துவீச்சால் சுனில் நரைன் 5 ரன்களிலும் டிகாக் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் இரண்டு ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர்களை வீழ்த்தியதால் கொல்கத்தா அணி தடுமாற தொடங்கியது. பின்னர் வந்த ரஹானே நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் 17 ரன்களில் அவரும் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரகுவன்சி 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களிலும், ரிங்கு சிங் 2 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். ரம்ன்தீப் சிங் டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ரானா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் வைபவ் அரோரா டக் அவுட் ஆனார். இறுதியாக களமிறங்கிய ஆன்ட்ரே ரசல் அடித்து அணியை வெற்றி பெற செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 17 ரன்கள் குவித்திருந்த நிலையில் போல்ட் ஆனார். இதனால் கொல்கத்தா அணி 15.1 ஓவரில் வெறும் 95 ரன்கள் குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.  

இதையும் படிங்க: PBKS இலக்கை ஷேஸ் செய்யக்கூடிய பேட்டிங் வரிசை இருக்கிறது.. அடித்து சொன்ன KKR கேப்டன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share