×
 

SRH-ஐ ஓட விட்ட பவுலர்கள்… அதிரடி ஆட்டத்தால் அசால்ட்டாக வெற்றி பெற்றது KKR!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகிறது.  இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர். ஆனால் குயிண்டன் டி காக் ஒரு ரன்னிலும், சுனில் நரேன் ஏழு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே மற்றும் இளம் வீரர் அங்கிரிஸ் ரகுவின்சி அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க துவங்கினர்.

இதன்மூலம் 4 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடித்து ரஹானே 27 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். இதேபோன்று மறுமுனையில் இருந்த ஆங்கிரீஸ் ரகுவன்சி 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். பின்னர் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் நிதானமாக ஆடி அணிக்கு ரன்களை குவித்தனர். ரிங்கு சிங் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை அனைத்து திசைகளிலும் பறக்கவிட்டனர். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதுவரை நடந்த போட்டிகளில் தடுமாறிய வெங்கடேஷ் ஐயர் இன்று 25 பந்துகளில் அரை சதத்தை கடந்தார்.

இதையும் படிங்க: வெளுத்து வாங்கிய வெங்கடேஷ் ஐயர்... KKR பேட்டிங்கை பார்த்து மிரண்டு போன SRH!!

29 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். பின்னர் கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் ரிங்கு சிங்கும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி 17 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. 201 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக திராவிசு கெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். ஆனால் இருவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த இஷான் கிஷனும் 4 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரன்களை குவிக்க தடுமாறியது. பின்னர் களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

7 ஓவர்கள் முடிவதற்குள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  4 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் 27 ரன்களிலும், அனிகெட் வர்மா 6 ரன்களிலும், கிளாசன் 33 ரன்களிலும், பேட் கம்மின்ஸ் 14 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிம்ரஜீத் சிங் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இவர்களை தொடர்ந்து ஹர்ஷல் பட்டேலும் முகமது சமியும் இணைந்து ரன்களை குவிக்க தடுமாறினர். அப்போது ஹர்ஷல் பட்டேல் அடித்த பந்தை ஆன்ட்ரே ரசல் கேட்ச் பிடித்தார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மறுபக்கம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதையும் படிங்க: வெளுத்து வாங்கிய வெங்கடேஷ் ஐயர்... KKR பேட்டிங்கை பார்த்து மிரண்டு போன SRH!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share