×
 

வெளுத்து வாங்கிய வெங்கடேஷ் ஐயர்... KKR பேட்டிங்கை பார்த்து மிரண்டு போன SRH!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆபாரமான ஆட்டத்தை பார்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவுலர்கள் மிரண்டுபோயினர்.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகிறது.  இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர். ஆனால் குயிண்டன் டி காக் ஒரு ரன்னிலும், சுனில் நரேன் ஏழு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இதை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே மற்றும் இளம் வீரர் அங்கிரிஸ் ரகுவின்சி அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க துவங்கினர். இதன்மூலம் 4 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடித்து ரஹானே 27 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். இதேபோன்று மறுமுனையில் இருந்த ஆங்கிரீஸ் ரகுவன்சி 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். பின்னர் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையும் படிங்க: ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த கேப்டனா? இவரை ஏன் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்தார்? இதோ விவரம்!!

பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் நிதானமாக ஆடி அணிக்கு ரன்களை குவித்தனர். ரிங்கு சிங் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை அனைத்து திசைகளிலும் பறக்கவிட்டனர். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதுவரை நடந்த போட்டிகளில் தடுமாறிய வெங்கடேஷ் ஐயர் இன்று 25 பந்துகளில் அரை சதத்தை கடந்தார்.

29 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். பின்னர் கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் ரிங்கு சிங்கும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி 17 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியின் அபாரமான பேட்டிங்கை பார்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பவுலர்கள் மிரண்டுபோயினர்.  

இதையும் படிங்க: மோசமாகி வரும் CSK பேட்டிங்... அணிக்குள் வரும் 2 இளம் வீரர்கள்... யார் தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share