×
 

4வது வெற்றியை பதிவு செய்த LSG... சாய் சுதர்சனிடம் இருந்து ஆரஞ்ச் தொப்பியை மீட்ட பூரான்!!

குஜராத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.

2025 ஐபிஎல் சீசனில் இன்று மதியம் நடந்த போட்டி லக்னோ அணிக்கும் குஜராத் அணிக்கும் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சாய் சுதர்சன் 37 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என 56 ரன்களை குவித்தார். சாய் சுதர்சனுக்கு நடப்பு தொடரில் இது 4வது அரைசதம்.

மறுபுறம் கில் 38 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்து 62 ரன்கள் குவித்தார். பின்னர் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய ஜாஸ் பட்லர் 16 ரன்களிலும் வாஷிங்டன் சுந்தர் 2 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ருத்தர்போர்ட் 22 ரன்கள் சேர்க்க ஷாருக்கான் 11 ரன்களில் வெளியேறினார். இதனால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை குவித்தது. இதனை அடுத்து 181 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதையும் படிங்க: பிளே ஆப்க்கு தகுதி பெறுமா CSK... அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹஸி சொல்வது என்ன?

தொடக்க வீரர்களாக பண்ட் மற்றும் ஏய்டன் மார்க்கரம் களமிறங்கினர். ஏய்டன் மார்க்கரம் 31 பந்துகளில் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்து 58 ரன்கள் குவித்தார். மறுபுறம் ரிஷப் பண்ட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான், தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை ஆடினார். இந்த ஆட்டத்தில் சாய் சுதர்சன் அரைசதம் அடித்ததால் நிக்கோலஸ் பூரானிடம் இருந்த ஆரஞ்சு தொப்பி சாய் சுதர்சனுக்கு சென்றது.

ஆனால் பூரான் அபாரமான ஆட்டத்தால் 34 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடித்து விளாசி 62 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அதே போட்டியில் சாய் சுதர்சனிடமிருந்து மீண்டும் நிக்கோலஸ் பூரான் ஆரஞ்சு தொப்பியை மீட்டார். அதேபோன்று ஆயுஸ் பதோனி 28 ரன்கள் எடுக்க லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: மிக மோசமாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்… ஈசியாக தட்டி தூக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share