×
 

சிஎஸ்கேவை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்.. முதல் போட்டி தோல்விக்கு பழி தீர்த்தது.!!

மும்பையில் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பையில் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே தரப்பில் ஷேக் ரஷீத் - ரச்சின் ரவீந்திரா கூட்டணி களமிறங்கியது. அஸ்வனி குமார் பந்தில் ரச்சின் 5 ரன்களில் வெளியேறினார். பின்னர் 17 வயதாகும் ஆயுஷ் மாத்ரே களமிறங்கிய உடனே 4, 6, 6 என்று அதிரடி கட்டினார். தொடர்ந்து ஆயுஷ் மாத்ரே பவுண்டரிகளாக விளாசினார். சிஎஸ்கே அணி பவர் பிளே முடிவில் 48 ரன்களை சேர்த்திருந்தது.
பின்னர் சிக்ஸ் அடிக்க முயற்சித்து ஆயுஷ் மாத்ரே 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே ஷேக் ரஷீத் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜடேஜா - சிவம் துபே கூட்டணி களத்தில் இருந்தது. களத்தில் இருந்தது. அப்போது சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 11 ஓவர்களில் 73 ரன்களாக இருந்தது.



தொடக்கத்தில் தடுமாறிய சிவம் துபே, பின்னர் அட்டாக்கில் ஈடுபடத் தொடங்கினார். இதனால் 15 ஓவர்களில் சிஎஸ்கே 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே அணி பெரிய ஷாட்டுகளை அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.16வது ஓவரில்  4, 6, 6 என்று விளாசிய சிவம் துபே, 30 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார்.  அந்த ஓவரில் ஜடேஜாவும் சிக்ஸ் அடிக்க, மொத்தமாக 24 ரன்கள் கிடைத்தது.  இதன்பின் பும்ரா பவுலிங்கில் சிவம் துபே 50 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தோனி களம் புகுந்தார்.

ஆனால், பும்ரா பந்தில் தோனி 4 ரன்களில் ஆட்டமிழக்க, ஜேமி ஓவர்டன் களம் புகுந்தார். பின்னர் கடைசி ஓவரை  போல்ட் வீசினார். அந்த ஓவரில் சிஎஸ்கே 16 ரன்கள் சேர்க்கப்பட, சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு  176 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் 177 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணியில் ரோஹித் சர்மாவும் ரிக்கல்ட்டனும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்டினர். இதனால் 2 ஓவர்களுக்குள் மும்பை அணி 20 ரன்களைக் கடந்தது. 6.4 ஓவர்களில் 63 ரன்களை மும்பை எடுத்தபோது ரிக்கல்ட்டன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோஹித்துடன் சூரியகுமார் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியைத் தொடர்ந்தனர். இதனால், 11ஆவது ஓவரில் மும்பை அணி 100 ரன்களைக் கடந்தது. பின்னர் இருவரும் அதிரடியைத் தொடர்ந்தனர். இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வந்த ரோஹித், இந்தப் போட்டியில் அரைசதம் விளாசினார்.



இன்னொரு முனையில் அதிரடி காட்டிய சூரியகுமாரும் அரைசதம் கடந்தார். தொடர்ந்து வேகம் காட்டிய இந்த ஜோடி வெற்றி இலக்கை 15.4 ஓவரிலேயே எட்டி மும்பையை வெற்றி பெற வைத்தது. ரோஹித் 76 ரன்களும், சூரியகுமார் 68 ரன்களும் எடுத்திருந்தனர். இத்தோல்வியின் மூலம் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது.

இதையும் படிங்க: இறுதி வரை போராடி தோற்ற RR… 2 ரன்கள் வித்தியாசத்தில் LSG அபார வெற்றி!!

இதையும் படிங்க: 200-ஐ கடந்த இலக்கு… அபார ஆட்டத்தால் சேஸ் செய்து வெற்றி பெற்ற குஜராத் அணி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share