×
 

பேட்டிங்கில் கோட்டை விட்ட SRH... அதிரடி ஆட்டத்தால் MI அசால்ட் வெற்றி!!

ஹைதராபாத் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி மும்பை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து ஹௌதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் இசான் கிஷன் களமிறங்கினர். அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். மறுபுறம் இசான் கிஷன் 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.  பின்னர் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 28 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அவரை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிதீஷ் குமார் 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஹென்றிச் கிளாசன் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகள் என 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய அன்கீட் வருமா 3 சிக்சர்கள் அடித்து 22 ரன்கள் குவித்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே குவித்தது. இதை அடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் களமிறங்கினர்.

இதையும் படிங்க: இஷான் கிஷனால் ஏமாந்துபோன ரசிகர்கள்... உச்சக்கட்ட கடுப்பில் காவ்யா மாறன்!!

ரோஹித் ஷர்மா 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடித்து 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதேபோல் ரியான் ரிக்கல்டன் 23 பந்துகளில் 5 பவுண்ட்ரிகள் விளாசி 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 15 பந்துகளில் 26 ரன்கள் குவித்து அவுட் ஆனார். வில் ஜேக்ஸ் 26 பந்துகளில் 2 சிக்ஸ்கள் 3 பவுண்ட்ரிகள் அடித்து 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து வந்த திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா கூட்டனி நிதானமாக ஆடி அணியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்து சென்றனர்.

ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 1 சிக்ஸ் 3 பவுண்ட்ரிகள் அடித்து 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நமன் டக் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து சாண்ட்னர் களமிறங்கினார். மறுபுறம் திலக் வர்மா 17 பந்துகளில் 21 ரன்கள் செர்த்துள்ளார். கடைசியாக 4 அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் மும்பை அணி 18.1 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது. இதை அடுத்து ஹைதராபாத் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: 7வது ஓவரில் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் தேவை... என்ன சொல்கிறார் இசான் கிஷன்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share