×
 

7வது ஓவரில் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் தேவை... என்ன சொல்கிறார் இசான் கிஷன்?

ஆடுகளத்தை பார்த்த பின் தான் எந்த இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் இசான் கிஷன் தெரிவித்துள்ளார்.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி மும்பை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து ஹௌதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் இசான் கிஷன், ஒருவேளை நாங்கள் சேசிங் செய்தால் எந்த இலக்கை நோக்கி விளையாடுகிறோம் என்பது நம் மனதில் எப்போதுமே இருக்கும்.

அதுவே நீங்கள் முதலில் பேட்டிங் செய்கிறீர்கள் என்றால் பந்தை பார்த்து அடிக்க வேண்டியது தான் நமது வேலை. முதல் ஆறு ஓவரில் எவ்வளவு ரன்களை அடித்து இருக்கிறோம். ஆடுகளம் நன்றாக இருக்கிறதா என்பதை பார்த்துக்கொண்டு அதன்பின் எந்த இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

எனவே இந்த இலக்கை தான் தொட வேண்டும் என்பது குறித்து எல்லாம் நாங்கள் யோசிக்கவில்லை. ஆனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஒரு வேளை நாங்கள் நல்ல தொடக்கத்தை எட்டி விட்டால் ஏன் எங்களால் முடியாது.

இதையும் படிங்க: வான்கடே மைதானத்தில் இதைதான் செய்ய வேண்டும்.. மும்பை கேப்டன் ஹர்திக் தகவல்!!

இதேபோன்று பேட்டிங் வரிசையில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் வருவது எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் சூழல் ஒரே மாதிரியாக தான் இருக்கும். எனினும் ஆடுகளத்தின் தன்மையை ஆராய்ந்து அதற்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும். ஒருவேளை விக்கெட்டுகள் விழுந்தால் நமது பேட்டிங் எவ்வாறு இருக்கப் போகிறது என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

இதற்கான திட்டத்தை பயிற்சியாளர்கள் வழங்கினால் அனைத்தும் சுலபமாகிவிடும். உங்களது பணி என்ன என்று உங்களுக்கு தெரிந்தால், அதை சரியாக செய்யலாம். ஒருவேளை நல்ல பவர் பிளே அமைந்தால் இன்னிங்ஸின் நடு ஓவர்களில் அதிரடி காட்டலாம். ஆனால் ஏழாவது ஓவரில் வந்து களமிறங்கும் போது பார்ட்னர்ஷிப் அமைப்பதிலே கவனம் செலுத்த வேண்டும். இது கொஞ்சம் வித்தியாசமான பணி தான். ஆனால் அதற்கு நான் என்னை தயார் படுத்திக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐபிஎல்லில் 4 வருடங்களுக்கு பின் வந்த சூப்பர் ஓவர்... டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share