×
 

ஐசிசி டிராபி கிரிக்கெட் தொடரை நடத்தி போண்டியான பாகிஸ்தான்.. நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பு.!!

அண்மையில் நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி கிரிக்​கெட் தொடர் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்​தில் பாகிஸ்​தானில் ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி நடை​பெற்​றது. 1996க்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெற்றதால், இத்தொடர் மீது அதிக கவனத்தை பாகிஸ்தான் செலுத்தியது. இந்தொடரை நடத்​து​வதற்​கு பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் லாகூர், கராச்​சி, ராவல்​பிண்டி ஆகிய 3 மைதானங்​களைத் தேர்வு செய்தது. இந்த மைதானங்களின் சீரமைப்பு பணிக்​காக சுமார் ரூ.504 கோடியை பாகிஸ்தான் செல​விட்​டிருந்​தது. இத்தொடருக்காக ஏற்​கெனவே மதிப்​பிட்ட தொகை​யை​விட 50 சதவீதம் அதி​கரித்​திருந்​தது.



தொடர்ந்து போட்​டிகளை நடத்​து​வதற்​கான ஏற்​பாடு​களுக்​கு என ஒட்​டு மொத்​த​மாக ரூ.868 கோடியை பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் முதலீடு செய்​திருந்​தது. ஆனால், இது​வரை பாகிஸ்​தான் போட்​டி​யில் பங்​கேற்​றதற்கு கட்​ட​ண​மாக ரூ.52 கோடி மட்​டுமே திரும்பி வந்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. மேலும் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடததால், லீக் போடிகள், அரையிறுதி, இறுதிப் போட்டி என 5 போட்டிகள் துபாயில் நடைபெற்றன. இதனால், பாகிஸ்தானுக்கு டிக்கெட் கட்டணம், இந்தியர்களின் பாகிஸ்தான் வருகையில் கிடைத்திருக்க வேண்டிய வருமானமும் கிடைக்காமல் போனது.



தவிர, டிக்​கெட் விற்​பனை, ஸ்பான்​சர்​கள் வாயி​லாக​வும் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு பெரிய அளவில் வரு​மானம் கிடைக்​க​வில்​லை. ஒட்​டுமொத்​த​மாக ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி தொடரை நடத்​தி​ய​தில் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் ரூ.738 கோடி நஷ்டம் அடைந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. இதனால், உள்​ளூர் போட்​டிகளில் விளை​யாடும் வீரர்​களுக்​கான ஊதி​யத்தை 90 சதவீதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறைத்​துள்​ளது. வீரர்கள் தங்​குமிடம், பயணக்​கட்​ட​ணம் ஆகிய​வற்​றிலும்  கெடு​பிடிகளை காட்டி வரு​கிறது. முன்​னர் 5 நட்​சத்​திர ஓட்​டல்​களில் தங்​கவைக்​கப்​பட்ட வீரர்​கள் தற்​போது சாதாரண வசதி கொண்ட ஓட்​டல்​களில் தங்​க வைக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க: வெளிநாட்டு தொடர்களுக்கு மனைவி இல்லாமல் எப்படி போவது.? பிசிசிஐ மீது கடுப்பு காட்டும் விராட் கோலி.!!

இதையும் படிங்க: இந்தியா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்றது நியாயமில்லையா.? குற்றம் சாட்டியவர்களை கும்மிய ஆஸ்திரேலிய ஜாம்பவான்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share