×
 

மொத்தமும் போச்சே... ஒரே ஒரு தொடரால் ரூ.2383 கோடியை இழந்து தவிக்கும் பாக்., கிரிக்கெட் வாரியம்..!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுமார் $85 மில்லியன் இழப்பை சந்தித்தது. இது பாகிஸ்தான் மதிப்பில் ரூ.2383 கோடிக்கு சமம்.

பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் உலகளாவிய கிரிக்கெட் போட்டி சாம்பியன்ஸ் டிராபி-2025 தொடர்தான்.  இது பாகிஸ்தான் விளையாட்டு வரலாற்றில் ஒரு பெருமை மிக்க தருணம் என நம்பி மகிழ்சியில் இருந்தது அந்நாட்டு கிரிக்கெட் அணி. ஆனால் இந்தப் போட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு மட்டுமல்ல, அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியது. 

முதலாவதாக, பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து, இந்தத் தொடரின் அடுத்தடுத்த ஆட்டங்களில் பாகிஸ்தான் அணியின் வீரர்களின் சம்பளமும் குறைந்துள்ளது. இந்தத் தொடர் பாகிஸ்தானுக்கு நிதி, அணியின் வலிமையை அடித்து நொறுக்கி உள்ளது. இந்தத் தொடரால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.2383 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

ராவல்பிண்டி, லாகூர், கராச்சியில் உள்ள மூன்று மைதானங்களை மேம்படுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 18 பில்லியன் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் சுமார் $58 மில்லியன் செலவிட்டது. இது அவர்களின் பட்ஜெட்டை விட 50 சதவீதம் அதிகம். இது தவிர, அவர் போட்டிகளை நடத்துவதற்காக முன் தயாரிப்புகளுக்காக 40 மில்லியன் டாலர்களை செலவிட்டது. ஆனாலும், அவர்கள் ஒளிபரப்பு கட்டணம், டிக்கெட் விற்பனை, ஸ்பான்சர்ஷிப்கள் மூலம் 6 மில்லியன் டாலர்களை மட்டுமே வருமானமாகப் பெற்றனர். இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுமார் $85 மில்லியன் இழப்பை சந்தித்தது. இது பாகிஸ்தான் மதிப்பில் ரூ.2383 கோடிக்கு சமம்.

இதையும் படிங்க: இன்றைய பாகிஸ்தான் டீமால் இந்திய பி டீமைகூட வீழ்த்த முடியாது.. கவாஸ்கர் கருத்தால் கொந்தளிக்கும் இன்சமாம்.!

இது தவிர, முகமது ரிஸ்வான் தலைமையிலான அணி சொந்த மண்ணில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியது. அது லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நியூசிலாந்திற்கு எதிராக நடந்தது. ராவல்பிண்டியில் பங்களாதேஷுக்கு எதிரான அவர்களின் அடுத்த போட்டி மழை காரணமாக டாஸ் நடைபெறாமல் கைவிடப்பட்டது. பாகிஸ்தானில் நடைபெறவிருந்த மீதமுள்ள எட்டு போட்டிகளில், இரண்டு போட்டிகளும் இதேபோல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த இழப்புக்குப் பிறகு, இப்போது அந்நாட்டு வீரர்கள் மோசமான விளைவுகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். தேசிய டி20 சாம்பியன்ஷிப்பில் போட்டி கட்டணம் 90 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வீரர்களுக்கான பணக்கொடைகள் 87.5 சதவீதம் குறைக்கப்பட்டன. ஒரு காலத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்த இந்த வீரர்கள், இப்போது பட்ஜெட் தங்குமிடங்களில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதே நேரத்தில் நிர்வாகிகள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள்.

"சமீபத்தில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டிக் கட்டணத்தை ஒரு வீரருக்கு ஒரு ஆட்டத்திற்கு ரூ.40,000 லிருந்து ரூ.10,000 ஆகக் குறைத்தது. இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி அந்த முடிவை ரத்து செய்து, வாரியத்தின் உள்நாட்டு கிரிக்கெட் துறைக்கு இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டார்" என்று பாகிஸ்தான் செய்தித்தாள் தி டான் செய்தி வெளியிட்டுள்ளது. 

வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை எவ்வளவு என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், ஒரு போட்டிக்கு ரூ.30,000 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றன. இது கடந்த ஆண்டை விட ரூ.10,000 குறைவு. சாம்பியன்ஸ் டிராபி ஏற்பாடு செய்யப்பட்டதில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிலை மோசமடைந்துள்ளது என்பது தெளிவாகிறது.

இதையும் படிங்க: அடுத்த ஐபிஎல்லில் விளையாட பாகிஸ்தான் நட்சத்திர வீரர் போட்ட பகீர் திட்டம்..! கோலியால் நம்பிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share