×
 

இன்றைய பாகிஸ்தான் டீமால் இந்திய பி டீமைகூட வீழ்த்த முடியாது.. கவாஸ்கர் கருத்தால் கொந்தளிக்கும் இன்சமாம்.!

இப்போதைய பாகிஸ்தான் அணியால். இந்திய-பி அணியைக் கூட வெல்ல முடியாது என்று இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சனத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பதிலடி கொடுத்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியில்  பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதில்,"பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்புகிறார், உடனே நாம் நிமிர்ந்து உட்கார்ந்தால் பேட்டர்கள் 'டொக்' வைக்கத் தொடங்குகின்றனர். ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வதே இல்லை, சிங்கிள்களை எடுக்கக்கூட முடியாமல் திணறுகின்றனர்.

பாகிஸ்தான் பேட்டர்கள் எந்த உணர்வும் இல்லாமல் இருக்கின்றனர்.
பாகிஸ்தானில் திறமைக்குப் பஞ்சமில்லை. இன்சமாம் உல் ஹக் போன்ற வீரரை ஏன் அவர்களால் உருவாக்க முடியவில்லை?
இப்போதைய பாகிஸ்தான் அணியால். இந்திய-பி அணியைக் கூட வெல்ல முடியாது” என்று கவாஸ்கர் கூறியிருந்தார். இதில் இந்திய பி அணியைக்கூட இன்றைய பாகிஸ்தான் அணியால் வெல்ல முடியாது என்று கவாஸ்கர் கூறியதுதான் சர்ச்சையாகிவிட்டது.

இதையும் படிங்க: ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வா..? சான்ஸே இல்லை.. கெத்தாக அறிவித்த ரோஹித் சர்மா.!



கவாஸ்கரின் இந்த விமர்சனத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பதில் அளித்துள்ளார். அதில்"கொஞ்சம் புள்ளி விவரங்களைப் பாருங்கள் கவாஸ்கர். நீங்கள் மூத்தவர், சீனியர் வீரர். அதனால் உங்களை மதிக்கிறேன். உங்கள் அணி நன்றாக விளையாடினால் அதைப் புகழுங்கள், பாராட்டுங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், இன்னொரு அணியைப் பற்றி இழிவாகப் பேச உங்களுக்கு உரிமை இல்லை. உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள் கவாஸ்கர். இதை நான் கடுமையாகவே சொல்கிறேன்” என்று காட்டமாக இன்சமாம் பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை தட்டி தூக்கியது ரோஹித் படை.. எம்.எஸ். தோனிக்கு பிறகு ரோஹித் சாதனை.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share