×
 

பாகிஸ்தானுக்கு மழையால் வந்த துரதிர்ஷ்டம்… ஒரே புள்ளியுடன் வெளியேறி அவமானம்..!

பாகிஸ்தான் - வங்கதேசப் போட்டியின் போது மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஏற்கெனவே வானிலை மையம் அறிவித்து இருந்தந்து. 

ராவல்பிண்டியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாகிஸ்தான்- வங்கதேசம் மோதும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி கைவிடப்பட்டது.

பாகிஸ்தானில், ராவல்பிண்டியில் தொடர்ந்து மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி துரதிர்ஷ்டவசமாக முடிவுக்கு வந்தது.

பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபபோதும் அட்டவணைப்படி இந்த போட்டியை நடத்த முடியவில்லை. நடுவர்கள் கடினமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளின் நிலை தலா ஒரு புள்ளியுடன் முடிவுக்கு வந்தது. துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தான் போட்டியை நடத்தும் நாடாக இருந்தபோதிலும், அவர்களின் சொந்த மண்ணில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியவில்லை.

இதையும் படிங்க: ICC Championship: அய்யோ பரிதாபம்.. இங்கிலாந்தை தொடரிலிருந்து துரத்தியது ஆப்கானிஸ்தான்.. சாதித்த ஆப்கன் வீரர்.!

 

பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் நடைபெறும் மூன்று இடங்களில் ஒன்றான ராவல்பிண்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குரூப் 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியின் 7வது போட்டியும் கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

 9வது போட்டியான பாகிஸ்தானுடன் வங்கதேசம் மோதும் போட்டி இரு அணிகளின் கவுரவப் பிரச்னையாக இருந்தது. ஏனென்றால் இரு அணிகளும்  குரூப் 'ஏ' பிரிவில் தங்கள் முதல் இரண்டுபோட்டிகளில் தோல்வியடைந்து அரையிறுதிக்கு முன்னேறும் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் பாகிஸ்தான் அணி, தனது ஆட்டத்தில் சமீபகாலமாக பெரும் சரிவை சந்தித்து வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முந்தைய போட்டியில் பரம எதிரியான இந்தியாவிடம் ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்கு பிறகு இன்றைய ஆட்டத்தில் களமிறங்க இருந்தது. கராச்சியில் நடைபெற்ற போட்டியில்  நியூசிலாந்திடம் தோல்வியுடன் தொடங்கிய அவர்கள் இந்தியாவிடமும் தோற்றனர்.

பாகிஸ்தான் - வங்கதேசப் போட்டியின் போது மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஏற்கெனவே வானிலை மையம் அறிவித்து இருந்தந்து. 

வங்கதேச அணி இந்த வார தொடக்கத்தில் ராவல்பிண்டியில் நியூசிலாந்து அணியுடன்  5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது. துபாயில் இந்தியா அணியிடம் வங்கதேசம் முதல் போட்டியில்  தோல்வியடைந்தனர்.

இதையும் படிங்க: ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலிதான் கிங்.. புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய ஜாம்பவான்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share