×
 

ICC Championship: அய்யோ பரிதாபம்.. இங்கிலாந்தை தொடரிலிருந்து துரத்தியது ஆப்கானிஸ்தான்.. சாதித்த ஆப்கன் வீரர்.!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இந்தியாவும் நியூசிலாந்தும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. பி பிரிவில் முக்கியமான போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மிகச் சிறப்பாக விளையாடினார். இப்ராஹிம் ஜத்ரான் கடைசி ஓவர் வரை களத்தில் நின்று 177 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தான் அணி சவாலான ஸ்கோரை எட்டிவத்ற்கு உதவினார். 146 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர் 12 பவுண்டரியுடன் 177 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது. அந்த அணியில் மற்ற வீரர்களின் பங்களிப்பால், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்ககளில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்தது.

கடினமான இலக்கை விரட்ட தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பிலிப் சால்ட் 12 ரன்னிலும் பென் டக்கட் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜெமி ஸ்மித் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஹேரி ப்ரூக் 25 ரன்களும், கேப்டன் ஜாஸ் பட்லர் 38 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அணிக்கு தொடர்ந்து நம்பிக்கை அளித்தார்.

அவருக்கு பக்க பலமாக ஜெமி ஓவர்டன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 8-ஆவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜோ ரூட் 112 ரன்கள் எடுத்து வெளியேற, அவரைத் தொடர்ந்து ஓவர்டன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 317 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. 

இதையும் படிங்க: ICC Champions Trophy : பத்தல பத்தல 351 ரன்னெல்லாம் பத்தல.. இங்கிலாந்தை அடிச்சி நொறுக்கி ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றி.!

இதையும் படிங்க: தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடும் இந்திய வீரர்.. வியக்க வைக்கும் உணவுக் கட்டுப்பாடு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share