×
 

ஏமாற்றிய ரிஷப் பண்ட்; டீமை தாங்கிபிடித்த பூரான்... லக்னோ உரிமையாளர் அதிருப்தி!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பண்ட் 2 ரன்களில் ஆட்டமிழந்தது அணியின் உரிமையாளரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

2025 ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் லக்னோ அணியும் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய லக்னோ அணி தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். ஏய்டன் மார்க்கரம் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து லோகி பெகுர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதை அடுத்து களமிறங்கிய பண்ட் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்.  5 பந்துகளை எதிர்கொண்ட அவர் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் மெக்ஸ்வெல் பந்துவீச்சில் பண்ட் ஆட்டம் இழந்தார். இதனால் லக்னோ அணி ரன்களை குவிக்க முடியாமல் திணறியது. இதை அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் மற்றும் ஆயுஸ் பதோனி ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடி ரன்களை குவித்து அணியை தூக்கி நிறுத்தினர்.

இதையும் படிங்க: ஐபிஎல்லில் கேப்டன் பதவியா.? வேண்டவே வேண்டாம் சாமி.. தலைத் தெறிக்கும் கே.எல். ராகுல்!

பூரான் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். பின்னர் சாஹல் பந்துவீச்சில் பூரான் ஆட்டம் இழந்தார்.  ஆயுஷ் பதோனியும் 33 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் டேவிட் மில்லர் வெறும் 18 பந்துகளில் 19 ரன்கள் தான் சேர்த்தார். இதன்மூலம் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக பணத்திற்கு சென்ற பண்ட் தற்போது தொடர்ந்து தடுமாறி வருகிறார். 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பண்ட் சரியாக ஆடாமல்,   டெல்லி அணிக்கு எதிராக 0, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 15 என அடித்து வந்த பண்ட் தற்போது வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார். இதனால் லக்னோ அணி உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மிக விரைவாக அதிக ரன்கள்... மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சாதனை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share