×
 

மைதானத்தில் குட்டி ரோஹித்தை கொஞ்சிய அனுஷ்கா சர்மா... வைரலாகும் புகைப்படம்!!

ரோஹித் சர்மாவின் மனைவி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகிய இருவரும்  குழந்தையுடம் மைதானத்தில் கொஞ்சி பேசி கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி இன்று இறுதி லீக் ஆட்டத்தில் விளையாடி வருகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தான், துபாய் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்த நிலையில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியுடன், நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில் காயம் காரணமாக ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என முதலில் கூறப்பட்டது. எனினும் ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் பங்கேற்றார். அனியின் கேப்டனான ரோஹித் சர்மா ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். ஆனால், 15ரன்களிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். 

இந்நிலையில் இன்றைய போட்டியை பார்க்க துபாய்க்கு ரோஹித் சர்மாவின் மகன் ஆஹான் மற்றும் ரித்திகா வந்துள்ளனர். இதேபோல் இன்றைய போட்டியில் விராட் கோலி பங்கேற்றுள்ளார். இது அவரது 300வது ஒரு நாள் போட்டி என்பதால் இந்த இமாலய சாதனையை நேரில் பார்க்க விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா வந்துள்ளார். 

இதையும் படிங்க: கிங் கோலி எண்ட்ரி....ஓபனிங்கே சும்மா அதிருதே!!

மைதானத்தில் இருவரின் குடும்பத்தினரும் இருந்துள்ளனர். அப்போது ரோஹித் சர்மாவின் மனைவி மற்றும் மகனை பார்த்த அனுஷ்கா சர்மா அவர்களை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மைதானத்தில் இரு வீரர்களும் விளையாடி கொண்டிருக்க அவர்களின் மனைவிகள் குழந்தையுடம் மைதானத்தில் கொஞ்சி பேசி கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் எடுத்தார். ஹர்த்திக் பாண்டியா 45 ரன்களும், அக்சர் படேல் 42 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதையும் படிங்க: இங்கிலாந்தை ஓரம்கட்டிய தென்னாப்பிரிக்கா...7 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share