×
 

ராஜஸ்தான் அணி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்.. ஏன் தெரியுமா? இதுதான் காரணமாம்!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கிற்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2025 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் மூன்று போட்டிகளுக்கு மட்டும் ரியான் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக விளையாடி தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி, நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மோதியது.

முதல் இரண்டு போட்டியில் தோல்வியடைந்ததால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிது. மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து அபாரமாக விளையாடி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அணியின் கேப்டன் ரியான் பராக், 27 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீசியபோது பவுலர்களை தேர்வு செய்வதிலும், ஃபீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்துவதிலும் அவர் மிக சரியாக செயல்பட்டார். மேலும், கடைசி ஓவரில் சிஎஸ்கே அணிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் சந்தீப் ஷர்மாவை பந்து வீச வைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக்கிற்கு 12 லட்சம் அபராதம் விதித்து போட்டிக்கான மேட்ச் ரெஃப்ரி அறிவித்துள்ளார்.

நேற்றை ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களின் ஓவர்களை வீசி முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக அம்பயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் ரியான் பராக் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார். அதனால் ஓவர்களை வீசி முடிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. தற்போது உள்ள ஐபிஎல் விதிப்படி ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு கேப்டன்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும். முதல் முறை இந்த தவறை செய்ததால் ரியான் பராக்கிற்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அவரது பவுலிங் சுத்தமா செட் ஆகாது... சிஎஸ்கே பவுலர் பற்றி முன்னாள் கேப்டன் கருத்து!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share