எல்லா போட்டிகளும் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.. RR கேப்டன் சஞ்சு சாம்சன் ஓபன் டாக்!!
முதலில் பந்து வீசுவது சாதகமான சூழலை கொடுக்கும் என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் டெல்லி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், நாங்கள் முதலில் பந்து வீச இருக்கின்றோம். ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறுகிறது. ஒவ்வொரு களமும் வித்தியாசமாக செயல்படுகிறது.
பொதுவாக ஐபிஎல் தொடரில் சேசிங் செய்யும் அணி தான் வெற்றி பெறும். தற்போது நாங்கள் தொடரின் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கின்றோம். முதலில் பந்து வீசுவது சாதகமான சூழலை கொடுக்கும் என நினைக்கின்றேன். ஐபிஎல் தொடர் தற்போது மிகவும் சவாலாக மாறிவிட்டது. எனவே முடிவை மட்டும் நாம் பார்க்க கூடாது. அதையும் தாண்டி யோசிக்க வேண்டும். நாங்கள் ஒரு அணியாக இணைந்து நல்ல செயல்பாட்டை களத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றோம். எது நடந்தாலும் நன்றாக விளையாட வேண்டும்.
இதையும் படிங்க: இதுக்கு நான் தான் காரணம்... தன் மீது பழி போட்டுக்கொண்ட KKR கேப்டன்!!
எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல், நாங்களும் முதலில் பந்து வீச தான் இருந்தோம். ஏனென்றால் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு அதிகம் இருக்கின்றது. தற்போது முதலில் பேட்டிங் செய்வதால் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டும். கடைசியில் நாங்கள் விளையாடிய போட்டியில் சேசிங் செய்தோம். ஆனால் நடுவில் சில ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம்.
மும்பைக்கு எதிரான போட்டியை கடந்து வர வேண்டும். அது நிச்சயம் எங்களுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது. மும்பைக்கு எதிரான போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். அது குறித்து அணி ஆலோசனை கூட்டத்தில் நாங்கள் பேசினோம். ஆட்டத்தின் நடு ஓவர்களில் மிகவும் சாதாரணமாக விளையாடிவிட்டோம் என்று நினைக்கின்றேன். அந்த தவறை இன்று செய்யக்கூடாது. எங்கள் அணியில் எந்த மாற்றமும் இன்று இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒருநாள் தொடரில் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை.. பிசிசிஐ அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!