×
 

கோலியை தலையில் அடித்து கடுப்பாக்கிய பவுலர்... அடுத்து நடந்த டிவிஸ்ட்!!

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் பதிரானா வீசிய பந்து ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேன் கோலியின் தலையில் அடித்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.

2025 ஐபிஎல் தொடரின் 8 ஆவது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து தொடக்க வீரர்களாக ஆர்சிபி அணி தரப்பில் பில் சால்ட் - விராட் கோலி களமிறங்கினர். சிஎஸ்கே அணி தரப்பில் முதல் ஓவரை கலீல் அஹ்மத் வீசினார். ஆர்சிபி அணியின் பில் சால்ட் முதல் சில பந்துகள் பில் சால்ட் தடுமாறினாலும், அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.

அடுத்தடுத்து பில் சால்ட் அதிரடியாக ரன்களை குவித்ததால், 4 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 37 ரன்களை விளாசியது.  5 ஆவது ஓவரில் நூர் அஹ்மத் வீசிய பந்தில் பவுண்டரி விளாச நினைத்த பில் சால்ட், ஒரு சென்டிமீட்டர்கள் வெளியில் கால்களை கொண்டு வந்த போது, தோனி மின்னல் வேகத்தில் பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்தார். இதை அடுத்து பில் சால்ட் 16 பந்துகளில் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையும் படிங்க: பில் சால்ட்-ஐ கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கிய தோனி... ஷாக்கான ஆர்.சி.பி ரசிகர்கள்!!

இதை அடுத்து களமிறங்கிய ரஜத் பட்டிதார் - விராட் கோலியுடன் சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினர். 10 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்திருந்த போது, விராட் கோலி 22 பந்துகளுக்கு 16 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். அப்போது பதிரானாவுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. அப்போது, பதிரானா வீசிய முதல் பந்து விராட் கோலியின் ஹெல்மெட்டில் வேகமாக அடித்தது.

இதை அடுத்து பிசியோதெரபிஸ்ட் மைதானத்திற்கு வந்து பரிசோதனை செய்தனர். பின்னர் தொடர்ந்து பதிரானா பந்து வீச தொடங்கினார். அப்போது அவர் வீசிய 2வது பந்தை ஃபைன் லெக் திசையில் சிக்ஸ் அடித்து விளாசினார். பின்னர் வீசிய 3வது பந்தையும் பவுண்டரி அடித்து அசத்தினார். பின்னர் நூர் அஹ்மத் வீசிய பந்தில் அவுட் ஆகி 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையும் படிங்க: இவங்கள அவுட் ஆக்கிட்டா இன்று வெற்றி நிச்சயம்... சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் சொல்வது யாரை?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share