டிரஸ்ஸிங் ரூமில் தகவல்களை கசிய விட்டு கருப்பு ஆடு இந்த வீரர்தான்..! கவுதம் கம்பீர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
கம்பீர் பயிற்சியாளராக இருக்கும் வரை, இந்த குற்றச்சாட்டு சர்பராஸ் கானின் கிரிக்கெட் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகவும் கொந்தளிப்பாகவே அமைந்து விட்டது. அந்த அணி பெர்த் மைதானத்தில் ஒரு வரலாற்று வெற்றியுடன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியது. ஆனால் இதற்குப் பிறகுதான் சரிவு தொடங்கியது. அடுத்த நான்கு போட்டிகளில் அந்த அணி மூன்று முறை தோல்வியடைந்தது. இதற்கிடையில், பாக்ஸிங் டே டெஸ்டுக்குப் பிறகு டிரஸ்ஸிங் ரூமில் நடந்த பல விஷயங்கள் வெளியே கசிந்தன. சிட்னி டெஸ்டுக்கு முன்பு, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ‘‘பயிற்சியாளருக்கும், வீரர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் டிரஸ்ஸிங் ரூமுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். வெளியே கசியக்கூடாது ’’என அறிவுறுத்தி இருந்தார்.
இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இளம் வீரர் சர்பராஸ் கான் மீது டிரஸ்ஸிங் ரூம் உரையாடல்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தொடரில் ஒரு டெஸ்ட் கூட விளையாட சர்பராஸுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தில் கம்பீர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாக கூறப்படுகிறது. கம்பீர் பயிற்சியாளராக இருக்கும் வரை, இந்த குற்றச்சாட்டு சர்பராஸ் கானின் கிரிக்கெட் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கவுதம் கம்பீர் வேஸ்ட்.. விவிஎஸ் லட்சுமணனை பயிற்சியாளர் ஆக்குங்கள்.. மாஜி வீரர் தடாலடி!
மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்தியா தோல்வியடைந்தது. இதன் பிறகு, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டிரஸ்ஸிங் ரூமில் மிகவும் கோபமாக இருந்தார். "போதும் போதும்" என்று கம்பீர் அணியை கடுமையாக சாடியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடாமல், டிரஸ்ஸிங் ரூமில் செய்யப்பட்ட திட்டங்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, 'இயற்கையான ஆட்டத்தை' விளையாட முயற்சிக்காதது குறித்து அணியின் பேட்ஸ்மேன்கள் மீது அவர் வருத்தப்பட்டார். டிரஸ்ஸிங் அறையில் சூழல் நன்றாக இல்லை. அங்கு கம்பீர் கடும் கோபத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
சர்பராஸ் கானும் காயமடைந்துள்ளார். இந்தக் காரணத்தினால் அவர் ரஞ்சி டிராபியின் அடுத்த சுற்றில் விளையாட மாட்டார். அவருக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் தேர்வு செய்யப்பட மாட்டார். மும்பை அணி தனது அடுத்த சுற்று ரஞ்சி டிராபி ஆட்டத்தை ஜனவரி 23 அன்று விளையாடும்.
இதையும் படிங்க: ரோஹித் - கம்பீருக்கும் இடையே விரிசல்..? தெளிவுபடுத்திய பிசிசிஐ..!