×
 

RR கேப்டனாகிறாரா சஞ்சு சாம்சன்? வெளியான முக்கிய தகவல்!!

ஆர்.ஆர். அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் மீண்டும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் மூன்று போட்டிகளுக்கு மட்டும் ரியான் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக விளையாடி தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால், அவர் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமி அவர் சிறிது காலத்திற்கு விக்கெட் கீப்பிங் செய்யக்கூடாது என அறிவுறுத்தி இருந்தது. அதே சமயம் அவர் பேட்டிங் செய்யலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. இதை அடுத்து ஐபிஎல் தொடரில் அவர் இம்பேக்ட் வீரராக ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் இடம் பெற சஞ்சு சாம்சன் முடிவு செய்தார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் அவர் தற்காலிகமாக விலகினார்.

இதையும் படிங்க: இதுக்கு எதுக்கு ஸ்ட்ரேடஜிக் டைம் அவுட்... லக்னோவை பங்கமாக கலாய்த்த ரசிகர்கள்!!

இதன்பின்னர் நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளில் மட்டும் ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அந்த மூன்று போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடினார். இந்த மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் மட்டும் 66 ரன்கள் குவித்தார். அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளில் 13 ரன்கள் மற்றும் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும், இந்த மூன்று போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று இருக்கிறது. தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.

அந்த அணியின் நெட் ரன்ரேட்டும் மோசமாக உள்ளது. இந்த மோசமான நிலையில் இருந்து சஞ்சு சாம்சன் கேப்டனாக அணியை சரியாக வழிநடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரியான் பராக் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்து நாளை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாட உள்ளது. அந்தப் போட்டியின் போது சஞ்சு சாம்சன் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என கூறப்படுகிறது. அப்போது முதல் அவர் கேப்டன் பொறுப்பை தொடர்ந்து ஏற்பார்.

இதையும் படிங்க: அபாரமான ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி... லக்னோ அணியை அசால்ட்டாக வீழ்த்தி வெற்றி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share