×
 

வீல் சேரில் ராகுல் டிராவிட்... என்னாச்சு அவருக்கு? பதறிய ரசிகர்கள்!!

ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் மைதானத்திற்கு சக்கர நாற்காலியில் வந்தது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் ஆடிய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வியடைந்தது. அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.

இந்த நிலையில் இன்றைய போட்டி கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், கேப்டனாக சஞ்சு சாம்சன் நீடிக்கிறார். மேலும் அந்த அணியில் ஹெட்மேயர், துரு ஜுரல், ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நித்திஷ் ராணா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, ஹசரங்கா, சந்திப் சர்மா ஆகியோர் முக்கிய ஆட்டக்காரர்களாக இடம் பெற்றுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனும் காயத்தில் சிக்கியிருக்கிறார்.

இதையும் படிங்க: குஜராத் டைட்டன்ஸ்-ஐ சுறுட்டிய பவுலர்கள்.. 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!!

அவர் முதல் மூன்று போட்டிகளில் விக்கெட் கீப்பராக பங்கேற்க முடியாததால் கேப்டன் பதவியை ரியான் பராக் வசம் வழங்கியிருக்கிறார். ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டும் ஆடி வருகிறார். ரியான் பராக் முதல் மூன்று போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக செயல்படவுள்ளார். ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். இவர் மைதானத்திற்கு சக்கர நாற்காலியில் வந்தார். இந்த காட்சியை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே கர்நாடக மாநில கிரிக்கெட் அமைப்பின் லீக் தொடர் ஒன்றில் விஜயா கிரிக்கெட் கிளப் என்ற அணிக்காக விளையாடிய போது அவரது இடது காலில் காயம் ஏற்பட்டதாகவும் இதனால் அவரால் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருந்த போதிலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களுடன் ஆலோசகராக உடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தற்போது சக்கர நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு ஐபிஎல் தொடரில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். அவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: இம்பேக்ட் பிளேயர் விதியை ஏன் மாத்தனும்? டுபிளசிஸ் சொல்லறத கேளுங்க!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share