ஆட்டத்தை கெடுத்த மழை.. RCB vs PBKS போட்டி நடக்குமா? வெளியான முக்கிய தகவல்!!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏறட்டுள்ளது.
2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இந்த நிலையில் இன்றை போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற இருந்தது.
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற இருந்த போட்டி, தற்போது மழை காரணமாக தொடங்காமல் உள்ளது. அந்த மைதானத்தில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று விளையாட உள்ள 2 அணிகளுமே இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும்2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
இதையும் படிங்க: பேட்டிங்கில் கோட்டை விட்ட SRH... அதிரடி ஆட்டத்தால் MI அசால்ட் வெற்றி!!
இதனால் புள்ளிப்பட்டியலில் 3 ஆம் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் 4 ஆம் இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திற்கு செல்லவும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை சொந்த மண்ணில் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
இதனால் 3வது போட்டியில் வென்று பெங்களூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில் பெங்களூரில் பெய்து வரும் மழையால் டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறப்பாக பந்து வீசிய மும்பை அணி... ஹைதாரபாத் அணியை 162 ரன்களில் சுருட்டி அசத்தல்!!