சாம்பியன்ஸ் டிராபி - ஏமாற்றிய ரோஹித்... பழித்தீர்ப்பாரா விராட் கோலி!!
265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணியின் தொடர்க்க வீரரும், கேப்டனுமாக விராட் கோலி ஆட்டமிழந்ததால் விராட் கோலி பேட்டிங் செய்து வருகிறார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லீக் போட்டிகள் கடந்த 2ம் தேதியுடன் முடிந்தது. குரூப் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி அரையிறுதியின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் அதீவிரமாக நடைபெற்றன.
இன்று மதியம் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் ஃபீல்டிங்கால் ஆஸ்திரேலிய அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி ரன் எடுக்க விடாமல் இந்திய அணியின் ஸ்பின்னர்ஸால் தடுமாறியது. இதனால் 20 ஓவர் முடிவில் அதே 20 ரன் வித்யாசத்தில் ஆஸ்திரேலிய அணி 105 ரன்களை எட்டி இருந்தது.
பின்னர் லபுஸ்சாக்னே விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் ஜடேஜா வீழ்த்தினார். நிதானமாக நின்று ஆடிய லபுஸ்சாக்னே 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 25 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து நிதானமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 68 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
இதையும் படிங்க: கையில் கருப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய வீரர்கள்... ரோஹித் உருவக்கேலிக்கு எதிர்ப்பா?
ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடினாலும் விக்கெட் கீப்பர் இங்கிலீஸை ஜடேஜா அவுட்டாக்கினார். ஷமி ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 7ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணியில் ஒவ்வொரு விக்கெட்டாக விழ அந்த அணியின் வீரர் அலெக்ஸ் கேரி மட்டும் அரைசதம் எடுத்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீ ஸ்மித் 73ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 3விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய அணியின் தொடர்க்க வீரரும், கேப்டனுமாக விராட் கோலி ஆட்டமிழந்தந்தால் விராட் கோலி பேட்டிங் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி.. அரையிறுதியில் இந்தியாவை சாய்க்க ஆஸ்திரேலியா வியூகம்... சுழற்பந்து தாக்குதல் நடத்த திட்டம்!