கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் வீரர்கள் தங்களின் திறமையான ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை செய்து வருகின்றனர். பேட்டிங்க், பவுலிங், ஃபீல்டிங் என ரெக்கார்டு பிரேக் பண்ண நீயா, நானா என போட்டி போடுவது வழக்கம். வெற்றிப்பெற்றால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள் அதேநேரம் தோல்வியடைந்தால் திட்டி தீர்த்துவிடுவார்கள்.
இது எதற்கும் அசராத வீரர்கள் தங்களின் கவனத்தை விளையாட்டில் மட்டுமே செலுத்துவது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் இன்று நடைபெற்ற ஐஐசி போட்டியிலும் நடந்துள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லீக் போட்டிகள் கடந்த 2ம் தேதியுடன் முடிந்தது. குரூப் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி அறையிறுதியின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி வருகிறது.

இன்று மதியம் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் ஃபீல்டிங்கால் ஆஸ்திரேலிய அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி ரன் எடுக்க விடாமல் இந்திய அணியின் ஸ்பின்னர்ஸால் தடுமாறியது. இதனால் 20 ஓவர் முடிவில் அதே 20 ரன் வித்யாசத்தில் ஆஸ்திரேலிய அணி 105 ரன்களை எட்டி இருந்தது.பின்னர் லபுஸ்சாக்னே விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் ஜடேஜா வீழ்த்தினார்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி - ஏமாற்றிய ரோஹித்... பழித்தீர்ப்பாரா விராட் கோலி!!
ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடினாலும் விக்கெட் கீப்பர் இங்கிலீஸை ஜடேஜா அவுட்டாக்கினார். ஷமி ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 7ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீ ஸ்மித் 73ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 3விக்கெட் வீழ்த்தினார்.

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ரோஹித் சர்மா 28 பந்துகளில் ஆட்டமிழந்தார். இவர் 3 பவுண்ட்ரிகளையும், ஒரு சிக்சரையும் அடித்து அசத்தினார். இதன் மூலம், ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து கிறிஸ் கெயில் 64 சிக்சர்களையும், மேக்ஸ்வெல் 49 சிக்சர்களையும் அடித்துள்ளனர். டேவிட் மில்லர் 44 சிக்சர்களை மட்டுமே அடித்துள்ளார். இந்த போட்டியில் ரோஹித் குறைந்த ரன்னில் ஆட்டமிழந்தாலும் சர்வதேச சாதனையை படைத்துள்ளார். தன்னை பற்றி உருவகேலி சர்சை இருந்தாலும் ரோஹித் தான் யார் என்பதை சிக்சர் மூலம் நிரூபித்துள்ளார்.
இதையும் படிங்க: கையில் கருப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய வீரர்கள்... ரோஹித் உருவக்கேலிக்கு எதிர்ப்பா?