2025 ஐபிஎல் சீசனில் நேற்றைய ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக பீல்டிங் மற்றும் அபாரமாக பவுலிங் செய்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பின் பேசிய தோனி, சென்னையில் விக்கெட் மிகவும் மந்தமாக இருந்தது.

நாங்கள் சென்னையை விட்டு வெளியே மற்ற மைதானங்களில் விளையாடும் போது எங்கள் பேட்டிங் குழு சற்று சிறப்பாகவே ரன் குவிக்கிறது. நாங்கள் நல்ல விக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அதுதான் பேட்ஸ்மேன்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும். அவர்களின் ஷாட்களை ஆடும் உத்வேகத்தை அளிக்கும். யாரும் பயந்து, பயந்து விளையாட விரும்ப மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: லக்னோ அணியை கதறவிட்ட தோனி.. புத்தாண்டுக்கு வெற்றியை பரிசாக கொடுத்த சிஎஸ்கே!!

ஏற்கனவே, மற்ற அணிகளை சேர்ந்தவர்களும் தங்களின் சொந்த மைதானத்தில் பிட்ச் தாங்களுக்கு ஏற்றபடி அமையவில்லை என புகார் கூறி வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் மிகவும் மந்தமாக இருப்பதால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள், பயந்து, பயந்து விளையாடுகிறார்கள் என தோனியும் புகார் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ஈடன் கார்டன் மைதான நிர்வாகத்திற்கும் இதனால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதான நிர்வாகத்திற்கும் இடையே பிட்ச் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாகீர் கான் லக்னோவில் அந்த அணி விளையாடிய முதல் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு பிட்சை தயாரித்தவர் மீது நேரடியாகவே விமர்சனத்தை முன் வைத்திருந்தார். தற்போது அந்தப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட்டுகள்... ஃபுல் ஃபார்மில் களமிறங்கிய சிஎஸ்கே!!