இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார் .இதுவரை, 38 வயதான அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், 537 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அவர், 8 முறை ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிறப்பாக பேட்டிங் செய்பவராகவும் அஸ்வின் விளங்கினார். ஆறு முறை சதம் அடித்துள்ள அஸ்வின், 14 முறை அரை சதம் அடித்துள்ளார்.வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .எப்போதும் மனதில் தோன்றுவதை யாருக்கும் அஞ்சாமல் சொல்லும் அஸ்வின் தற்போது கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இந்திக்கு யாரும் ஆதரவு அளிக்காததால், இந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி தான் என பேசி மாஸ் காட்டியுள்ளார்
இதையும் படிங்க: பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடக்குமா, ரத்தாகுமா? காரணம் என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது, இதில் 23 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார்.இதில் பேசிய அஸ்வின், தமிழ் ஓகே வா, ஆங்கிலம் ஓகே வா , இந்தி ஓகே வா என கேட்டார்.தமிழுக்கு மட்டுமே மாணவ மாணவிகள் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தனர்.இந்திக்கு யாரும் ஆதரவு அளிக்காததால், இந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி தான் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அஸ்வின் இதை நான் சொல்லியே ஆக வேண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் நான் கேப்டனாக இல்லாததற்கும் பொறியியல் தான் காரணம் என்றும், யாராவது என்னை நீ சரிபட்டு வரமாட்ட என்று கூறினால் தான் அதை செய்வேன்.கேப்டன் விஷயத்தில் யாரும் என்னை அப்படி கேட்கவில்லை அதனால் நான் இந்திய அணிக்கு கேப்டன் ஆகவில்லை என்று தெரிவித்தார்.1000க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்ட நிகழ்வில் உங்களால் இது முடியாது என சொல்ல லட்சம் பேர் வருவார்கள் அவர்களை ஓரம்கட்டிவிட்டு முன்னேறிச்செல்லுங்கள் என்றும் அறிவுரை வழங்கினார்
இதையும் படிங்க: இந்திய அணி தோல்வி: ஆஸ்திரேலிய‘பிட்ச் ரேட்டிங்கை’ வெளியிட்டது ஐசிசி