2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி மும்பை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து ஹௌதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் இசான் கிஷன் களமிறங்கினர். அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். மறுபுறம் இசான் கிஷன் 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 28 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

அவரை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிதீஷ் குமார் 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹென்றிச் கிளாசன் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகள் என 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய அன்கீட் வருமா 3 சிக்சர்கள் அடித்து 22 ரன்கள் குவித்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே குவித்தது. முன்னதாக ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி முதல் முறையாக 300 ரன்கள் அடிக்கும் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஸ்டெயின் கணித்திருந்தார்.
இதையும் படிங்க: 7வது ஓவரில் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் தேவை... என்ன சொல்கிறார் இசான் கிஷன்?

ஆனால், சன்ரைசர்ஸ் அணி வெறும் 162 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. இது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. மறுபுறம் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே அபாரமாக விளையாடி இஷான் கிஷன் சதம் அடித்தார். இதனால் அவரும் அபார ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் ஆட்டத்திற்கு பிறகு அவர் ஆடிய 6 இன்னிங்ஸில் வெறும் 32 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இஷான் கிஷனிடம் தொடக்க காலம் முதலே கன்சிஸ்டன்சி பிரச்சனை இருந்து வருவதாகவும் சிறந்த ஷாட்கள் இருந்தாலும், கொஞ்சம் ஸ்விங்கோ அல்லது பிட்சில் ஸ்பின்னோ இருந்தால், அவர் தடுமாறுவதை பார்க்க முடியும் என்றும் கூறிய கிரிக்கெட் வல்லுநர்கள், இன்றைய போட்டியில் கூட வில் ஜாக்ஸ் வீசிய பந்தில் இறங்கி அடிக்க முயற்சித்து டர்னில் ஏமாந்து 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி அணியின் உரிமையாளர் காவிய மாறனும் டென்சனாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இஷான் கிஷனால் ஏமாந்துபோன ரசிகர்கள்... உச்சக்கட்ட கடுப்பில் காவ்யா மாறன்!!