2025 ஐபிஎல் சீசனில் இன்றைய ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். சால்ட் இரண்டாவது பந்தில் அவுட் ஆனார். பின்னர் படிக்கல் கோலியுடன் சேர்ந்து அதிரடியாக ஆட தொடங்கினார்.

படிக்கல் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து 22 பந்துகளில் 37 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் விராட் கோலி அபாரமாக ஆடினார். 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கல் அடித்து 42 பந்துகளில் 67 ரன்களை குவித்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய லிவிங்ஸ்டோன் டக்அவுட் ஆனார். இதனால் ஆர்.சி.பி. அணி தடுமாற தொடங்கியது. அப்போது களமிறங்கிய கேப்டன் பட்டிதார், மும்பை அணியின் பந்துகளை தெறிக்கவிட்டார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரி என பந்துகளை வெளுத்து வாங்கினார்.
இதையும் படிங்க: மோசமாக விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி... நொந்துபோன காவ்யா மாறன்!!

இதனால் பந்துவீச்சாளர்கள் செய்வதறியாது திணறினர். 32 பந்துகளில் 64 ரன்களை குவித்த பட்டிதார் ஆட்டமிழந்து வெளியேறினார். அவருடன் சேர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜித்தேஷ் சர்மா, 19 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும். சிறப்பாக பந்து வீசிய பும்ரா, 4 ஓவர்களில் விக்கெட் ஏதும் இன்றி 29 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

நான்கு ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி 57 ரன்கள் விட்டுக் கொடுத்தார். கடைசி ஐந்து ஓவரில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 70 ரன்களை எடுத்தது. இதன் மூலம் ஆர்.சி.பி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: புள்ளி பட்டியலில் சரிந்த பஞ்சாப் கிங்ஸ்... ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி..!