×
 

அபிஷேக் சர்மாவிடம் தோற்ற இங்கிலாந்து: சால்ட் செய்த ‘அசால்ட்’: டி20 தொடரை வென்றது இந்திய அணி

மும்பை வான்ஹேடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

மும்பை வான்ஹேடே மைதானத்தில் நேற்று நடந்த கடைசி மற்றும் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்தது. 248 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 10.3 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

2வது அதிகபட்ச வெற்றி இந்திய அணி டி20 போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வென்ற 2வது போட்டியாகும். இதற்கு முன் 2023ல் நியூசிலாந்துக்கு எதிராக 168ரன்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

வருண் சக்ரவரத்தி தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்ட இந்த போட்டியில் 135 ரன்கள் சேர்த்த வெற்றியை உறுதி செய்த சாதனை நாயகன் அபிஷேக் சர்மா ஆட்டநாயகனாகவும், 14 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அபிஷேக் சர்மா அடித்த 135 ரன்களைக் கூட இங்கிலாந்து அணியால் கடக்க முடியாமல் அபிஷேக் சர்மாவிடமே தோல்வி அடைந்துள்ளது.

இதையும் படிங்க: ‘புஸ்’ஸாகிப் போன கோலி! ஸ்டெம்ப் தெறித்து போல்டாகியதால் ஏமாற்றத்துடன் வெளியேறிய ரசிகர்கள்

அபிஷேக்கின் அசாத்திய சாதனைகள்: அபிஷேக் சர்மா நேற்று 35 பந்துகளில் 54 பந்துளில் 135 ரன்கள் சேர்த்ததில் 13 சிக்ஸர்கள் அடங்கும். அதாவது அபிஷேக் சர்மா இந்த ஆட்டத்தில் அவர் சந்தித்த ஒவ்வொரு 4 பந்துகளிலும் ஒரு சிக்ஸரை விளாசியுள்ளார். மேலும் அவர்  மட்டுமே நேற்று ஏராளமான சாதனை செய்துள்ளார். அது குறித்த விவரம் பின் வருமாறு.

அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரைசதம் அடித்து, அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய பேட்டர்களில் யுவராஜ் சிங்(12பந்து) அடுத்தார்போல் 2வது இடத்தில் அபிஷேக் உள்ளார். பவர்ப்ளே முடிவதற்குள்  அபிஷேக் 58 ரன்களைச் சேர்த்துவிட்டார். 37 பந்துகளில் சதம் அடித்து அதிவேகமாக சதம் அடித்த இந்திய பேட்டர்களில் ரோஹித் சர்மா(35பந்து)வுக்கு அடுத்தார்போல் 2வது இடத்தில் அபிஷேக் சர்மா உள்ளார்.

இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக 135 ரன்கள் சேர்த்த அபிஷேக் சர்மாவின் ஸ்கோர்தான் டி20 போட்டியில் இந்திய வீரர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் சுப்மான் கில் 126 ரன்களை நியூசிலாந்துக்கு எதிராகச் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் உலக டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 156 ரன்களுக்கு அடுத்தார்போல் அபிஷேக் உள்ளார்.

அபிஷேக் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 13 சிக்ஸர்களை விளாசி, ஒரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்று சாதனை புரிந்தார். இதற்கு முன் 2017ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா 10 சிக்ஸர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது, அதை அபிஷேக் முறியடித்தார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் சேர்த்தது. இதுதான் பவர்ப்ளேயில் இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோராகும்.

இதற்கு முன் 2021ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக 82 ரன்கள் சேர்த்திருந்ததே இந்திய அணியின் அதிபட்சமாக இருந்தது. அதுமட்டுமல்ல இந்திய அணி 100 ரன்களை 6.3 ஓவர்களில் நேற்று அதிவேகமாக அடைந்தது, இதற்கு முன் வங்கதேசத்துக்கு எதிராக 7.1 ஓவர்களில் அடைந்திருந்த நிலையி்ல் இப்போது அதைவிட வேகமாக எட்டிதற்கு அபிஷேக் சர்மாவே காரணம்.

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சேர்க்கப்பட்ட 2வது அதிபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி 248 ரன்கள் சேர்த்திருந்தது, அதைவிட ஒரு ரன் குறைவாக இந்திய அணி சேர்த்தது. வான்ஹடே மைதானத்திலும் அடிக்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோராகும்.

திலக்வர்மா, அபிஷேக் கூட்டணி 7.1 ஓவர்களில் 115 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டியது. இந்திய அணியில் எந்தவிக்கெட்டுக்கும் இடையே சேர்க்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுதான். 25வயதுக்குள்ளாகவே அபிஷேக் சர்மா 6 சர்வதேச சதங்களை விளாசியுள்ளார், அதில் 2 டி20 போட்டியில் அடிக்கப்பட்டவை. இதில் 2 சதங்கள் 40 பந்துகளுக்குள்ளாகவே அடிக்கப்பட்டவை.

இப்படி நேற்றை ஆட்டம் முழுவதும் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் மட்டுமே நிரம்பியிருந்தது.
இந்த ஆட்டத்தில் ஷிவம் துபே 2 ஓவர்கள் பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை  வீழ்த்தி இங்கிலாந்து கேப்டன் பட்லருக்கு பதிலடி கொடுத்தார். கடந்த ஆட்டத்தில் துபே கன்கசனில் வெளியேறியபோது அவருக்குப்பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா சேர்க்கப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. அவர் எடுத்த 3 விக்கெட்டுகளும் விமர்சிக்கப்பட்டது.

இங்கிலாந்து கேப்டன் பட்லரும், துபேவுக்கு சரியான மாற்று ராணா அல்ல. துபே ஒரு பேட்டர், ராணா பந்துவீச்சாளர். துபேயால் பந்துவீச முடியுமா, விக்கெட் வீழ்த்த முடியுமா எனக் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் ஷிவம் துபே பந்துவீசி பில் சால்ட், பெத்தெல் ஆகிய 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்திய அணியிலும் நேற்று அபிஷேக் சர்மா(135), திலக் வர்மா(24), துபே(30) ஆகியோரைத் தவிர நடுவரிசை வீரர்கள் ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் பெரிதாக ரன் சேர்க்கவில்லை, விக்கெட்டையும் விரைவாக இழந்தனர்.

இங்கிலாந்து மோசமான பேட்டிங்: இங்கிலாந்து அணிக்கு இந்த ஸ்கோரைப் பார்த்ததுமே நம்பிக்கையிழந்து இருக்கலாம். அதனால்தான் பில் சால்ட் தவிர எந்த பேட்டரும் ஒற்றை இலக்க ரன்னைக்கூட கடக்கவில்லை. இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு எந்தவிதத்திலும் சிரமம் கொடுக்காமல் பீல்டர்களை நிற்க வைத்த இடத்தில் கேட்சை கொடுத்து இங்கிலாந்து பேட்டர்கள் எளிதாக தோல்வியை ஒப்புக்கொண்டதுபோல் தெரிகிறது.

பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலம் தலைமையில் ஆக்ரோஷமான பேஸ்பால் ஆட்டத்தை விளையாடுவார்கள் என எதிர்பார்த்தநிலையில் பெரிதாக எந்த போராட்டக் குணத்தையும் இங்கிலாந்து பேட்டர்கள் வெளிப்படுத்தவில்லை. டி20 தொடரை இழந்துவிட்டோம் என்ற சோர்வும், பெரிய ஸ்கோரை எவ்வாறு சேஸ் செய்யப் போகிறோம என்ற மனஅளற்ச்சியும் பேட்டர்கள் ஆட்டமிழந்து சென்றபோது தெரிந்தது.

இதில் விதவிலக்காக பில் சால்ட் அரைசதம் அடித்து ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஃபார்முக்கு வந்துள்ளார். 
இந்தியத் தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண், துபே, அபிஷேக் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

இதையும் படிங்க: குருமந்திரத்தால் விராட் கோலியை கிரிக்கெட்டில் உயர்த்திய ராம் ரஹீம்..? மகளுடனே படுக்கை... யார் இந்த சல்சா சாமியார்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share