2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில் சில அணிகள் மோசமாக விளையாடினாலும் மீதமிருக்கும் அணிகள் மிக சிறப்பான ஆட்டதை வெளிபடுத்தி வருகிறது.

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் முடிவில், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இதுவரை கோப்பை வெல்லாத பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளும், இதுவரை விளையாடிய போட்டிகளில் ஐந்து வெற்றிகளைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: சொந்த மண்ணில் வைத்து CSK-வை வீழ்த்திய SRH... 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்தில் உள்ளது. இந்த ஆறு அணிகளுமே இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளன. இந்த ஆறு அணிகளில் நான்கு அணிகள்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பை வெல்லும் என யுவராஜ் சிங் கணித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பேசிய அவர், இந்த ஆண்டு எனக்குப் பிடித்தமான அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஆனால் இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆண்டாக இருக்கும், அதாவது பஞ்சாப் அணி கோப்பை வெல்லும் என்று தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் பஞ்சாபைச் சேர்ந்தவர் என்பதால், பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஆண்டு கோப்பை வெல்லும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 154 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய SRH... வெற்றி பெறுமா CSK?